சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னையில் அண்ணாமலை ஆக.16-ல் நடைபயணம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னையில் அண்ணாமலை ஆக.16-ல் நடைபயணம்
Updated on
1 min read

சென்னை: சுற்றுச்சூழல் பாது​காப்பை வலி​யுறுத்​தி, சென்​னை​யில் ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்​பின் தலை​வர் அண்​ணா​மலை தலை​மை​யில் ஆக.16-ம் தேதி பிரம்​மாண்ட நடைபயணம் நடை​பெற உள்​ளது.

பாஜக​வில் இருந்து வில​கிய முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்ணாமலை, ‘வீ த லீடர்​ஸ்’ என்ற அமைப்​பைத் தொடங்கி​னார். இந்த அமைப்​பில் இது​வரை 19.32 லட்​சம் பேர் இணைந்​துள்​ளனர். பொது​மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் சிறப்பு முகாம்​ அமைக்​கப்​பட்​டு, உறுப்​பினர் சேர்க்கை தீவிர​மாக நடந்து வரு​கிறது.

உள்​ளாட்​சித் தேர்​தலில் இந்த இயக்​கம் நேரடி​யாகக் களமிறங்​கும் என்று அண்​ணா​மலை ஏற்​கெனவே அறி​வித்​திருந்​தார். இதற்​காக கோவை​யில் பிரத்​யேக பயிற்சி மையம் தொடங்​கப்​பட்​டு, வேட்​பாளர்​களுக்​கான பயிற்​சிகளும் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

தேர்​தலுக்கு முன்​ன​தாக மக்​களு​டன் நேரடி​யாக தொடர்​பில் இருக்​க​வும், அவர்​களது அன்​றாடப் பிரச்​சினை​களுக்கு குரல் கொடுத்து ஆதர​வைத் திரட்​ட​வும் அண்​ணா​மலை திட்​ட​மிட்​டுள்​ளார். இதன் ஒரு பகு​தி​யாக, பொள்​ளாச்​சி​யில் கடந்த 12-ம் தேதி நடை​பெற்ற போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்​டில் உரை​யாற்​றி​னார்.

இந்​நிலை​யில், அடுத்த மாதம் முழு​வதும் சுற்​றுச்​சூழல் விழிப்​புணர்​வுப் பணி​களை முன்​னெடுக்க ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்பு முடிவு செய்​துள்​ளது. இதன் தொடக்​க​மாக, ஆக.2-ம் தேதி கன்​னி​யாகுமரி​யில் தூய்​மைப் பணியை அண்​ணா​மலை தொடங்கி வைக்​கிறார்.

தொடர்ந்​து, ஆக.16-ம் தேதி சென்​னை​யில் பிரம்​மாண்ட நடைபயணம் மேற்​கொள்​கிறார். எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானம் அருகே இந்த நிகழ்ச்​சியை நடத்த காவல் துறை அனு​மதி அளித்​துள்​ள​தாக தெரி​கிறது. இதற்​கான ஏற்​பாடு​களை ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்​பினர் மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இதில் தமிழகம் முழு​வ​தி​லும் இருந்து திரளான நிர்​வாகி​கள் பங்​கேற்க உள்​ளனர். இதுகுறித்து அமைப்​பின் நிர்​வாகி ஒரு​வர் கூறும்​போது, “உள்​ளாட்​சித் தேர்​தலில் களமிறங்​கு​வதற்கு முன்​பு, மக்​களின் ஆதர​வைப் பெறு​வதே எங்​களின் முதன்மை இலக்​கு. அதற்​காகவே மக்​கள் சார்ந்த பிரச்​சினை​களை கையில் எடுத்து வரு​கிறோம்.

உறுப்​பினர் எண்​ணிக்கை 50 லட்​சத்தை தொட்​ட​வுடன், இது முழு​மை​யான அரசி​யல் கட்​சி​யாக மாறும் என்று அண்​ணா​மலை ஏற்கெனவே தெளிவுபடுத்​தி​யுள்​ளார்.

ஒரு​வேளை, உள்​ளாட்​சித் தேர்​தலுக்​குள் அந்த இலக்கை எட்ட முடி​யா​விட்​டால், ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்​பின் பெயரிலேயே தேர்​தலைச்சந்​திப்​போம். அடுத்த 6 மாதங்​களுக்​குள் இதுகுறித்த அதி​காரப்​பூர்​வ அறி​விப்​பு வெளியாகும்’’ என்றார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னையில் அண்ணாமலை ஆக.16-ல் நடைபயணம்
வருமானவரித் துறை அலுவலர்கள் நாட்டின் நிதி நிலைமையை காக்கும் காவலர்கள்: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in