‘ஜென்ஸீ’ தலைமுறை சரியான முடிவு எடுக்க வேண்டும் - அண்ணாமலை கருத்து

‘வி த லீடர்​ஸ்’ இயக்​கம்  தொடங்​கிய பிறகு நேற்று முதன்​முறை​யாக கோவை வந்த அண்ணாமலைக்​கு, அவரது ஆதர​வாளர்​கள் விமான நிலை​யத்​தில் உற்​சாக வரவேற்​பளித்​தனர்.

‘வி த லீடர்​ஸ்’ இயக்​கம் தொடங்​கிய பிறகு நேற்று முதன்​முறை​யாக கோவை வந்த அண்ணாமலைக்​கு, அவரது ஆதர​வாளர்​கள் விமான நிலை​யத்​தில் உற்​சாக வரவேற்​பளித்​தனர்.

Updated on
1 min read

கோவை: ஜென்​ஸீ தலை​முறைக்கு எல்லா டேட்​டா​வும் எளி​தாக கிடைக்​கும் நிலை​யில், சரி​யான முடிவு​களை எடுக்க வேண்​டும் என கோவை​யில் நடந்த பட்​டமளிப்பு விழா​வில் அண்ணாமலை பேசி​னார்.

கோவையில் தனியார் கல்வி குழும கல்​லூரிகளின் பட்​டமளிப்பு விழா, கருமத்தம்பட்​டி​யில் உள்ள தமிழ்​நாடு பொறி​யியல் கல்​லூரி வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்​நிகழ்​வில், ‘வி த லீடர்​ஸ்’ அமைப்​பின் முதன்மை பணி​யாளர் அண்​ணா​மலை கலந்து கொண்டு மாணவ, மாணவி​களுக்கு பட்​டங்​களை வழங்கி பேசி​ய​தாவது: ‘டைம்’ என்ற ஆங்​கில பத்திரிகை முக்​கிய நபர்​களை அட்​டைப்​பட​மாக வெளி​யிடும். 1982-ல் அந்த புத்​தகம் கம்​யூட்​டர் படத்தை போட்​டது. இது நமது வாழ்க்கை முறையை மாற்​றப்​போகிறது எனத் தெரி​வித்​தது.

அந்தப் புத்​தகம் 2025-ல் ஏஐ துறை​யில் இருக்​கும் 7 நபர்​களின் படங்​களை போட்டு அடுத்த 20 ஆண்​டு​களுக்கு ஏஐதான் எனத் தெரி​வித்​தது. ஏஐ நம்மை அழிக்க முடி​யாது. ஆனால் ஏஐ தெரி​யாத மாணவர்​களுக்கு அது பிரச்​சினை​யாக முடி​யும். மாணவர்​கள் தொடர்ந்து தொழில்​நுட்ப வளர்ச்​சிகளை தெரிந்து கொள்ள வேண்​டும்.

தமிழ்​நாட்​டில் படிக்​கும் மாணவர்​களில் 51 சதவீதம் பேர் கல்​லூரிக்​குள் நுழைகின்​றனர். அடுத்த 10 ஆண்​டு​களில் ஏஐ தொடர்​பான பெயர்​களை கேட்​டுக்​கொண்டே இருப்​பீர்​கள். இதே​போல, உலகத்தை மாற்​றும் நபர்​களில் உங்​கள் பெயர் இருந்து கொண்டே இருக்க வேண்​டும். சிறிய​தாக எதை​யும் நினைக்கக் கூடாது, பெரிய​தாக கனவு காண வேண்​டும். ரிஸ்க் எடுத்து பிரச்​சினை​களுக்குத் தீர்வு காண வேண்​டும்.

ஜென்​ஸீ தலை​முறைக்கு எல்லா டேட்​டா​வும் எளி​தாக கிடைக்​கிறது. ஆனால், முடிவு​களை எடுப்​ப​தில்​லை. சரி​யான முடிவு​களை அடுத்து வரும் ஆண்​டு​களில் எடுக்க வேண்​டும். 10 ஆண்​டு​களில் திரும்​பிப் பார்த்​தால் உங்​களு​டன் படித்த 10 சதவீத கல்​லூரி மாணவர்​கள் மட்​டுமே இருப்​பார்​கள். உங்​களுக்கு நிர்​வாக பொறுப்​பு​கள் வரும், போகும். அதை எப்​போதும் மனதில் வைக்​காதீர்​கள். தொடர்ந்து படித்​துக்​கொண்டே இருங்​கள். இது ஒரு மைல் கல் மட்​டுமே. நிறைய மைல்​ கல்​களை அடைய வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

உற்சாக வரவேற்பு: முன்​ன​தாக இயக்​கம் தொடங்​கியபிறகு நேற்று முதன்​முறை​யாக கோவை வந்த அண்​ணா​மலைக்​கு, அவரது ஆதர​வாளர்​கள் விமான நிலை​யத்​தில் உற்​சாக வரவேற்​பளித்​தனர். பூங்​கொத்​துகள் கொடுத்​தும், சால்வை அணி​வித்​தும், கோஷங்​களை எழுப்​பி​யும் வரவேற்​றனர். பின்​னர், காளப்​பட்​டி​யில் உள்ள வீட்​டில் இயக்​கத்​தின் முன்​னணி நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார்.

<div class="paragraphs"><p>‘வி த லீடர்​ஸ்’ இயக்​கம்  தொடங்​கிய பிறகு நேற்று முதன்​முறை​யாக கோவை வந்த அண்ணாமலைக்​கு, அவரது ஆதர​வாளர்​கள் விமான நிலை​யத்​தில் உற்​சாக வரவேற்​பளித்​தனர்.</p></div>
தவெக எதன் மூலம் வென்றதோ, அதை பயன்படுத்தி நாமும் வெல்வோம்: நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in