“கேசவ விநாயகத்துக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை” - அண்ணாமலை விளக்கம்

அண்ணாமலை

அண்ணாமலை

Updated on
1 min read

திருப்பூர்: “கேசவ விநாயகம் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு பிரச்சாரகர். கேசவ விநாயகம் குறித்த வீண் சர்ச்சைகள், விவாதங்கள் முடிவுக்கு வரும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது” என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள கேசவ விநாயகத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பில் ‘சத்பாவ்’ (சமுதாய நல்லெண்ணம்) எனும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்ணாமலை உள்ளிட்டோர் கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. இந்தப் பின்னணியில்தான் கேசவ விநாயகம் குறித்து அண்ணாமலை பேசியிருக்கிறார்.

இது குறித்து திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “கேசவ விநாயகம் நீண்ட காலமாக பாஜவில் சிறப்பாக பணியாற்றியவர். நல்ல மனிதர், கடுமையாக உழைக்க கூடியவர், மிக எளிமையாக வாழக்கூடியவர். அவர் ஆரஎஸ்எஸ் பிரச்சார பணியில் இருக்கிறார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து பாஜவுக்கு கொடுக்கப்பட்டார். பின்னர் பாஜவில் இருந்து திரும்ப பெறப்பட்டு, அவருக்கு வேறு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக அமைப்பு பொதுச் செயலர்கள் இல்லை. கேசவ விநாயகம் அரசியல்வாதி இல்லை. அவர் ஒரு பிரச்சாரகர். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு கொண்டாட்டம் தொடர்பான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

கேசவ விநாயகத்தின் வேலை முடிந்து விட்டது. அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அவர், அவரது வேலையை செய்கிறார், நான் என் வேலையை செய்கிறேன். சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தோம். கேசவ விநாயகம் குறித்த வீண் சர்ச்சைகள், விவாதங்கள் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்” என்றார்.

<div class="paragraphs"><p>அண்ணாமலை</p></div>
கேசவ விநாயகத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பில் ‘சத்பாவ்’ பொறுப்பு வழங்கல்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in