தரப் பரிசோதனை நடத்திய பின்னரே பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

தரப் பரிசோதனை நடத்திய பின்னரே பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தர பரிசோதனை நடத்​திய பின்​னரே தமிழகம் முழு​வதும் பள்ளி மாணவர்​களுக்கு சைக்கிள்கள் வழங்க வேண்​டும் என பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை கூறியுள்​ளார்.

இதுகுறித்து அவரது எக்ஸ் தள பதிவு: கோவை மாவட்​டம் ஒண்​டிப்​புதூர் அரசு மேல்​நிலைப்​பள்​ளி​யில், 11-ம் வகுப்பு மாணவர்​கள் 117 பேருக்​கு, வழங்​கிய சைக்கிள்கள், சரியாகப் பொருத்​தப்​ப​டாமலும், சில உதிரி​பாகங்​கள் இல்​லாமலும் வழங்​கப்​பட்​டுள்​ளன.

மாணவர்​களுக்​கு, இலவச சைக்​கிள் திட்​டத்​தின்​கீழ் வழங்​கப்​பட்ட சைக்கிள்கள், இப்​படி தரமற்ற உதிரி​பாகங்​களு​டன் வழங்​கப்​பட்​டுள்​ளது வன்​மை​யாகக் கண்​டிக்​கத்​தக்​கது.

கடந்த ஆண்​டு​களி​லும், இது​போன்ற தரம் குறைந்த சைக்கிள்கள் வழங்​கப்​பட்​ட​தால், மாணவர்​கள் அவற்றை நீண்​ட​காலம் பயன்​படுத்த முடி​யாமல், தங்​கள் சொந்த செல​வில் பழுது பார்த்​தும், பல மாணவர்​கள் அவற்றை விற்​பனை செய்​த​தாக​வும் செய்​தி​கள் வெளிவந்​தன.

குறிப்பாக கோவை மாவட்​டத்​தில் இதே பிரச்​சினை தொடர்​கிறது. இந்த சைக்​கிள் ஒப்​பந்​த​தா​ரர்​கள்யார், ஏன் தொடர்ந்து தரம் குறைந்த சைக்​கிள்​கள் கோவை பள்ளி மாணவர்​களுக்​குக் கொடுக்​கப்​படு​கின்​றன? கோவை​யில் மட்​டும் இந்த ஆண்டு 17,782 மாணவர்​களுக்கு சைக்​கிள்​கள் வழங்​கப்பட வேண்​டும்.

ஒவ்​வொன்​றும் சுமார் ரூ.4,300 என்று திமுக அரசால் கூறப்​படும் சைக்கிள்​கள், இப்படி அடிப்​படைக் குறை​பாடு​களைக் கூட சரிசெய்​யாமல் வழங்​குவதை ஏற்றுக்​கொள்​ளவே முடி​யாது.

கோவை மட்​டுமின்றி, தமிழகம் முழுவதுமேசைக்​கிள்களை தர பரிசோதனை நடத்திய பின்னரே வழங்​க வேண்​டும். தரம்​குறைந்த சைக்​கிள்​கள் வழங்​கும் ஒப்​பந்​த​தா​ரர்​கள் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

தரப் பரிசோதனை நடத்திய பின்னரே பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
கும்பகோணம் | பிளஸ் 1 மாணவர்கள் தாக்கியதில் மூளைச்சாவு அடைந்த பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in