“காலச்சூழலுக்கு ஏற்ப திறமைகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்” - மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை

அண்ணா பல்கலைக்கழக 46-வது பட்டமளிப்பு விழா
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவருக்கு பட்டம் வழங்குகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.  உடன் உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், இஸ்ரோ செயற்கைக் கோள் மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, பல்கலைக்கழக பதிவாளர் வி.குமரேசன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பி.சக்திவேல். படம்: எஸ்.சத்தியசீலன்

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவருக்கு பட்டம் வழங்குகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன் உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், இஸ்ரோ செயற்கைக் கோள் மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, பல்கலைக்கழக பதிவாளர் வி.குமரேசன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பி.சக்திவேல். படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on
1 min read

சென்னை: ​மாறிவரும் காலச்​சூழலுக்​கேற்ப புதிய திறமை​களை வளர்த்​துக்​கொள்ள வேண்​டும் என்று பொறி​யியல் பட்​ட​தா​ரி​களுக்கு இஸ்ரோ செயற்​கைக்​கோள் மைய முன்​னாள் இயக்​குநர் மயில்​சாமி அண்​ணாதுரை அறி​வுரை வழங்​கி​னார்.

அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் 46-வது பட்​டமளிப்பு விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. பல்​கலைக்​கழக வேந்​தரும் தமிழக ஆளுநரு​மான ஆர்​.என்​.ரவி தலைமை வகித்​தார். பல்​கலைக்​கழக அளவில் முதலிடம் பிடித்த மாணவ-​மாணவி​களுக்கு ஆளுநர் பதக்​கங்​களை​யும் பட்​டங்​களை​யும் வழங்​கி​னார். பிஇ, பிடெக்., எம்இ, எம்​டெக். உள்​ளிட்ட படிப்​பு​களில் 1 லட்​சத்து 50,595 பேருக்கு பட்​டங்​கள் வழங்​கப்​பட்​டன.

இவ்​விழா​வில் இஸ்ரோ செயற்​கைக்​கோள் மைய முன்​னாள் இயக்​குநர் விஞ்​ஞானி மயில்​சாமி அண்​ணாதுரை பேசி​ய​தாவது: நாம் அடைவதை விரும்​புவதும் வெற்​றி​தான்​. பள்​ளிக்​காலம் தொட்டு நான் விரும்​பியவை எனக்கு கிடைக்​க​வில்​லை. கிராமத்து அரசு பள்​ளி​யில் படித்​தேன். எனக்கு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு பணி​யில் சேர ஆசை. ஆனால், இஸ்​ரோ​வில் செயற்​கைக்​கோள் திட்​டத்​தில் பணி கிடைத்​தது. விரும்​பிச் செய்​த​தால், நில​வுக்கு வெற்​றிகர​மாக அனுப்​பப்​பட்ட சந்​திர​யான்-1 விண்கலத் திட்​டத்​துக்கு தலைமை தாங்கி வழி நடத்​தினேன். நாம் விரும்​புவது கிடைக்​கா​விட்​டாலும் கிடைப்​பவற்றை விரும்​பிச் செய்​தால் அது​வும் வெற்​றி​தான்.

எனவே கிடைக்​கின்ற வாய்ப்​பு​களை நன்கு பயன்​படுத்​திக் கொள்​ளுங்​கள். விண்​வெளித்​துறை சாதனை​யாளர்​களில் 90 சதவீதம்​பேர் அரசு பள்​ளி​யில் அது​வும் தமிழ்​வழி​யில் படித்​தவர்​கள் தான். மாறிவரும் காலச்​சூழலுக்கு ஏற்ப புதிய திறமை​களை வளர்த்​துக்​கொள்ள வேண்​டும். வாழ்​நாள் முழு​வதும் கற்​றுக்​கொண்டே இருக்க வேண்​டும். உலகப் பொருளா​தார மன்ற ஆய்​வின்​படி 2030-க்​குள் கோடிக்​கணக்​கான வேலை​வாய்ப்​பு​கள் காணா​மல் போகும். அதே​நேரம் அதே அளவுக்​கான புதிய வேலை​வாய்ப்​பு​களும் உரு​வாகும். எனவே, புதிய பணி​களுக்கு நம்மை தகு​திப்​படுத்​திக்​கொள்ள வேண்​டியது அவசி​யம். இவ்​வாறு கூறி​னார்.

முன்​ன​தாக, பல்​கலைக்​கழகஒருங்​கிணைப்​புக்​குழு​வின் தலை​வரும், உயர்​கல்​வித் துறை​யின் செயலரு​மான பொ.சங்​கர் பேசும்​போது, “அண்ணா பல்​கலைக்​கழகத்தை உலகத்​தரத்​துக்கு மேம்​படுத்​தும் வகை​யில் ஒருங்​கிணைக்​கப்பட்ட ஆய்​வகங்​கள், செயற்கை நுண்​ணறிவு கட்​டமைப்​பு​கள், ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுப் பணி​களுக்​காக தமிழக அரசு ரூ.1,380 கோடிவழங்​கி​யுள்​ளது” என்​றார்.

விழா​வில், பல்​கலைக்​கழக பதி​வாளர் வி.குமேரசன், தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் பி.சக்​திவேல் மற்​றும் பேராசிரியர்​கள், மாணவ-​மாணவி​கள், பெற்​றோர்கலந்​து​கொண்​டனர். பல்​கலைக்​கழகங்​களின் துணைவேந்​தர் நியமனத்​தில் தமிழக அரசுக்​கும் ஆளுநருக்​கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலை​யில், இணைவேந்​தரும், உயர்​கல்வி அமைச்​சரு​மான கோவி.செழியன் பல்​கலைக்​கழக பட்​டமளிப்​பு விழா​வில்​ பங்​கேற்​காமல்​ புறக்​கணித்​தார்​.

<div class="paragraphs"><p>அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவருக்கு பட்டம் வழங்குகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.  உடன் உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், இஸ்ரோ செயற்கைக் கோள் மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, பல்கலைக்கழக பதிவாளர் வி.குமரேசன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பி.சக்திவேல். படம்: எஸ்.சத்தியசீலன்</p></div>
“அரசியலில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்” - அண்ணாமலை உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in