பிப்.3-ல் அண்ணாவின் 57-வது நினைவு தினம்

பிப்.3-ல் அண்ணாவின் 57-வது நினைவு தினம்
Updated on
1 min read

சென்னை: முன்​னாள் முதல்​வர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தை முன்​னிட்டு பிப். 3-ம் தேதி சென்னை மெரி​னா​வில் உள்ள அண்ணா நினை​விடத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி மரி​யாதை செலுத்​துகிறார்.

இது தொடர்​பாக அதி​முக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​பதாவது: அதி​முக சார்​பில் அண்ணாவின் 57-வது நினைவு தினம், சென்னை மெரினா கடற்​கரை​யில் அமைந்​துள்ள அண்ணா நினை​விடத்​தில் பிப்​.3-ம் தேதி காலை 10 மணிக்கு அனுசரிக்​கப்​படு​கிறது.

இதில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பங்​கேற்​று, மலர் வளை​யம் வைத்​து, மலர் தூவி அஞ்​சலி செலுத்​தவுள்​ளார். தொடர்ந்து தலை​மைக் கழகச் செய​லா​ளர்​கள் மலர் அஞ்​சலி செலுத்​து​வார்​கள்.

இந்த நிகழ்ச்​சி​யில் மாவட்ட செய​லா​ளர்​கள், கட்சி எம்​பிக்​கள், எம்​எல்​ஏக்​கள், முன்​னாள் அமைச்​சர்​கள், முன்​னாள் எம்​பி, எம்​எல்​ஏக்​கள், கட்​சி​யின் பல்​வேறு பிரிவு​களைச் சேர்ந்த நிர்​வாகி​கள் பங்​கேற்​கின்​றனர். இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

பிப்.3-ல் அண்ணாவின் 57-வது நினைவு தினம்
ஆம்ஸ்ட்ராங் கொலை: பொன்னை பாலுவுக்கு 5 நாள் ஜாமீன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in