

அன்புமணி
சென்னை: போக்குவரத்துக் கழகங்களுக்கு 3,274 ஓட்டுநர், நடத்துநர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிட பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தப்போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு 7 மாதங்களாகும் நிலையில், இதுவரை அதற்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை. தாமதப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
எனவே முடிவுகளை வெளியிட்டு ஆள்தேர்வு நடைமுறைகளை விரைவுபடுத்தி, தகுதியானவர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.