புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் குப்பை எரி உலை திட்டத்தை கைவிட அன்புமணி வலியுறுத்தல்

புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் குப்பை எரி உலை திட்டத்தை கைவிட அன்புமணி வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: கீரப்​பாக்​கம் குப்பை எரிஉலை திட்​டத்தை கைவிட வேண்​டும் என்​று, பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: சென்​னையை அடுத்த வண்​டலூர்​-கேளம்​பாக்​கம் நெடுஞ்​சாலை​யில் கீரப்​பாக்​கம் கிராமத்​தில் குப்பை எரி உலைத் திட்​டத்​தை​யும், அதனுடன் இணைந்த நிலம் நிரப்பு திட்​டத்​தை​யும் செயல்​படுத்த திமுக அரசு முடிவு செய்​துள்​ளது.

புற்​று​நோய் உள்​ளிட்ட ஏராள​மான நோய்​களை ஏற்​படுத்​தும் குப்பை எரி உலைத் திட்​டங்​களை எதிர்ப்​பை​யும் மீறி ஸ்​டா​லின் அரசு செயல்​படுத்​தத் துடிப்​பது கண்​டிக்​கத்​தக்​கது.

மேலை நாடு​களில் குப்பை எரி உலைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்​துள்​ளது. தீமை​கள் இருந்​தும் கூட குப்பை எரிஉலைகளை அமைக்க திமுக அரசு துடிப்​ப​தன் நோக்​கம், அதற்​கான ஒப்​பந்​தங்​களை வழங்​கு​வதன் மூலம் ஆட்​சி​யாளர்​களுக்கு கிடைக்​கும் பல கோடி ரூபாய் கையூட்​டும், இன்​னும் பல வெகும​தி​களும் தான்.

புற்​று​நோய் உள்​ளிட்ட ஏராள​மான நோய்​களை ஏற்​படுத்​தும் குப்பை எரி உலைகளை அமைக்க துடிப்​பதை மன்​னிக்க முடி​யாது. எனவே, கீரப்​பாக்​கத்​தில் குப்பை எரி உலை அமைக்​கும் திட்​டத்தை தமிழக அரசு கைவிட வேண்​டும்.

அதே​போல், சென்​னை, கொடுங்​கையூர் குப்பை எரி உலை திட்​டம், பெருங்​குடி எரி உலை திட்​டம் ஆகிய​வற்​றை​யும் கைவிட்​டு,

உச்​ச நீ​தி​மன்​றம் உத்​தர​வின்​படி, நகர்ப்​புற திடக்​கழிவு மேலாண்மை விதி​களின் கீழ், திடக் கழி​வு​களை வகைப் பிரித்து மேலாண்மை செய்​வதற்கு தமிழக அரசு முன்வர வேண்​டும்.

குறிப்​பாக, பூஜ்ஜிய குப்பை எனப்​படும் குப்​பை​யில்லா நகரங்​கள் கோட்​பாட்டை விரைந்து செயல்​படுத்த வேண்​டும். இல்​லா​விட்​டால் மக்​களைத் திரட்டி மிகப் பெரிய அளவி​லான அறப்​போ​ராட்​டத்தை பாமக நடத்​தும் என அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் குப்பை எரி உலை திட்டத்தை கைவிட அன்புமணி வலியுறுத்தல்
விளையாட்டு விடுதி மாணவர்கள் 2,600 பேருக்கு உபகரணங்கள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in