

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்டா விவசாயிகளைக் காக்க, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கச் செய்தல், சம்பா தொகுப்பாக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கி அதன்மூலம் பாசனத் தேவைகளை சமாளித்து சம்பா சாகுபடியை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடும், தமிழக மக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் மலிவு விலையில் வெளிச்சந்தை அரிசியையும் வழங்க வேண்டும்.
சம்பா சாகுபடியும் சாத்தியமாகாத நிலையில் பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் சிறப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.