திருவான்மியூர் - உத்தண்டி சாலை ஒப்பந்தம்: ரூ.700 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்

திருவான்மியூர் - உத்தண்டி சாலை ஒப்பந்தம்: ரூ.700 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: பாமக தலை​வர் அன்​புமணி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: சென்னை கிழக்கு கடற்​கரை சாலை​யில் திரு​வான்​மியர்-உத்​தண்​டி இடையே ரூ.2,100 கோடி​யில் உயர்​மட்​டச்​சாலை அமைப்​ப​தற்​கான ஒப்​பந்​தம் கடந்த டிச.24-ம் தேதி ஐதரா​பாத்தை சேர்ந்த கேஎன்ஆர் கன்​ஸ்ட்​ரக்​ஷன்ஸ் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டது.

உயர்​மட்​டச்​சாலை அமைக்​கும் பணியை கேஎன்ஆர் நிறு​வனம் குறிப்​பிட்​டிருந்த தொகை​யை​விட ரூ.700 கோடி குறை​வான செல​வில் முடித்து தரு​வ​தாக, மத்​தி​யப்​பிரதேசத்தை சேர்ந்த திலிப் பில்ட்​காப் என்ற நிறு​வனம் ஒப்​பந்​தப்​புள்ளி அளித்​திருந்த நிலை​யில், அந்த நிறு​வனத்தை நிராகரித்து விட்ட திமுக அரசு, கேஎன்ஆர் நிறு​வனத்​துக்கு ரூ.2,100 கோடி ஒப்​பந்​தத்தை வழங்​கி​யுள்​ளது.

கேஎன்ஆர் நிறு​வனத்​துக்கு ஒப்​பந்​தத்தை வழங்​குவதற்​காகவே திலிப் பில்ட்​காப் நிறு​வனத்​தின் தொழில்​நுட்ப ஒப்​பந்​தப்​புள்​ளியை திமுக அரசு திட்​ட​மிட்டு தள்​ளு​படி செய்​திருக்​கிறது. ரூ.700 கோடி வரை ஊழல் நடை​பெற்​றிருக்​கலாம் என்பதால் இதுகுறித்து சிபிஐ வி​சா​ரணை நடத்த தமிழக அரசு ஆணை​யிடவேண்​டும் என்றார்​.

திருவான்மியூர் - உத்தண்டி சாலை ஒப்பந்தம்: ரூ.700 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்
டாஸ்மாக் பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்: தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in