ரயில்வே தொழில் பழகுநர் நியமனத்தில் தமிழர்களின் வாய்ப்புகளை பிறருக்கு தாரைவார்ப்பதை தடுக்க வேண்டும்: அன்புமணி

ரயில்வே தொழில் பழகுநர் நியமனத்தில் தமிழர்களின் வாய்ப்புகளை பிறருக்கு தாரைவார்ப்பதை தடுக்க வேண்டும்: அன்புமணி
Updated on
1 min read

சென்னை: பாமக தலை​வர் அன்​புமணி நேற்று வெளி​யிட்ட அறிக்கை: தெற்கு ரயில்வேயின் தமிழக எல்​லைக்​குட்​பட்ட பணிமனை​களில் தொழில் பழகுநர்​கள் பயிற்​சிக்​காக 6,171 பேரை தேர்ந்​தெடுப்​ப​தற்​கான அறிவிக்கை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இம்​மாதம் 27-ஆம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. தொழில் பழகுநர் நியமன அறிவிக்​கை​யில், தமிழக வேலை​வாய்ப்பு அலு​வல​கங்​களில் பதிவு செய்​திருக்க வேண்​டும் என்ற பிரிவு நீக்​கப்​பட்​டுள்​ளது.

அது​மட்​டுமின்​றி, தட்​சிண கன்​னடா பகு​தி, ஆந்​தி​ரா​வின் நெல்​லூர், சித்​தூர் பகுதி மற்​றும் கேரளா​வில் இருப்​பவர்​களும், அந்​த​மான் நிக்​கோ​பார், லட்​சத்​தீவு போன்ற பிற மாநிலங்​களில் இருப்​பவர்​களும் விண்​ணப்​பிக்​கலாம் என குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இதன் மூலம் தமிழக இளைஞர்​களுக்கு கிடைக்க வேண்​டிய தொழில் பழகுநர் பணி பிற மாநிலத்​தவருக்கு தாரை​வார்க்​கப்​படும் நிலை உரு​வாகி​யுள்​ளது. இதை அனு​ம​திக்க முடி​யாது.

வழக்​க​மான விதி​களை புறந்​தள்​ளி​விட்​டு, வெளி​யிடப்​பட்​டுள்ள இந்த அறிவிக்​கை​யின் மூலம் தமிழகத்​தில் உள்ள தொழில் பழகுநர் பயிற்சி இடங்​களை பிற மாநிலத்​தவருக்கு தாரை​வார்க்க தெற்கு ரயில்வே முயற்சி செய்​வது கண்​டிக்​கத்​தக்​கது.

கால் நூற்​றாண்​டுக்​கும் மேலாக தெற்கு ரயில்வே துறை​யில் உள்ள பணி​களை பிற மாநிலத்​தவர் பறித்​துக்​கொள்​கின்​றனர். தொழில் பழகுநர் வாய்ப்​பு​களும் அதே போல் பறிக்​கப்​பட்டு வந்த நிலை​யில் தான், நீண்ட போராட்​டத்​தின் மூலம் 2019-ம் ஆண்​டில் தமிழக இளைஞர்​களின் வேலை​வாய்ப்பு உரிமை மீட்​டெடுக்​கப்​பட்​டது.

அந்த உரிமைக்கு தான் இப்​போது மீண்​டும் ஆபத்து ஏற்​பட்​டிருக்​கிறது. தமிழக இளைஞர்​களின் தொழில் பழகுநர் வாய்ப்​பு​களை பறிக்​கும் நோக்​கம் கொண்ட அறிவிக்​கையை தெற்கு ரயில்வே உடனடி​யாக ரத்து செய்ய வேண்​டும்.

தமிழக வேலை​வாய்ப்பு அலு​வல​கங்​களில் பதிவு செய்​தவர்​கள் மட்​டும் தான் இந்த பணிக்கு விண்​ணப்​பிக்க முடி​யும் என்ற விதியை சேர்த்து புதிய ஆள்​தேர்வு அறிவிக்​கையை தெற்கு ரயில்வே புதி​தாக வெளி​யிட வேண்​டும். இதற்​காக ரயில்வே வாரி​யத்​துக்கு தமிழக அரசு அழுத்​தம் தர வேண்​டும்​. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரயில்வே தொழில் பழகுநர் நியமனத்தில் தமிழர்களின் வாய்ப்புகளை பிறருக்கு தாரைவார்ப்பதை தடுக்க வேண்டும்: அன்புமணி
நகர்ப்புற உள்ளாட்சிகளில் கூட்டம் எப்போது? - மக்கள் நீதி மய்யம் கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in