ரூ.50 ஆயிரம் கோடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்க சதித் திட்டம்: அன்புமணி குற்றச்சாட்டு

ரூ.50 ஆயிரம் கோடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்க சதித் திட்டம்: அன்புமணி குற்றச்சாட்டு
Updated on: 
1 min read

சென்னை: பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தை அழிக்க ரூ.50 ஆயிரம் கோடி​யில் சதித் திட்​டம் தீட்​டப்​படுவ​தாகவும், முதல்​வர் விஜய் தனிக்​கவனம் செலுத்தி அதை தடுத்து நிறுத்த வேண்​டும் எனவும் பாமக தலை​வர் அன்​புமணி கேட்​டுக்​கொண்​டு உள்​ளார்.

இது​தொடர்​பாக பனையூரில் உள்ள பாமக அலு​வல​கத்​தில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்​கிரமித்து அழிக்க பல்​வேறு நிறு​வனங்​கள் திட்​ட​மிட்டு முயற்சி செய்து வரு​கின்​றன. அதற்கு அதி​காரி​கள் துணை நிற்​கின்​றனர்.

உயர் நீதி​மன்​றத்​துக்கு தவறான தகவல்​களை வழங்கி நீதி​மன்​றத்​தையே தவறாக வழிநடத்​தும் வகை​யில் சூழ்ச்​சிகள் நடை​பெறுகின்​றன. இந்த விவகாரத்​தில் முதல்​வர் விஜய் நேரடி​யாக தலை​யிட​வில்லை என்​றால், ரூ.50 ஆயிரம் கோடி ஊழல் என்ற மிகப்​பெரிய குற்​றச்​சாட்டு அவர் மீது வரும்.

சதுப்​புநிலம் எது என்​பதை முறை​யாக வரையறுக்க வேண்​டும் என்​ப​து​தான் எங்​களது கோரிக்கை. இதை வரையறுப்​பது தொடர்​பாக 200 வகை​யான வரைபடங்​களை முக்​கிய அதி​காரி ஒரு​வரிடம் கொடுத்​தும், தனியார் கட்​டு​மான நிறு​வனங்​களின் நிலங்​களை காப்​ப​தற்​காக அவற்றை அந்த அதி​காரி நிராகரித்​துள்​ளார். இது மிகப்​பெரிய மோசடி​யாகும்.

பரந்​தூர் போன்ற மிகப்​பெரிய திட்​டத்தை நிறுத்​திய முதல்​வர், பள்​ளிக்​கரணை சதுப்​புநிலம் அழிந்​தால் சென்னை பாதிக்​கப்​படும் என்​பதை ஏன் யோசிக்​க​வில்லை? பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தை சுற்​றியுள்ள ஒரு லட்​சம் பேருக்கு பட்டா கிடைக்​காது என தனியார் கட்​டு​மான நிறு​வனங்​கள் கூறு​வதும் உண்மை கிடை​யாது. முதல்​வர் விஜய் இதில் தனிப்​பட்ட கவனம் செலுத்த வேண்​டும்.

ஊழல், சூழ்ச்​சிகளை தடுத்து நிறுத்த வேண்​டும். அதேபோல் கடந்த ஆட்​சி​யில் உலக வங்​கி​யில் ரூ.21.6 கோடி கடன் வாங்கி பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்​தில் 10 அடி உயரம், 15 அடி அகலத்​தில் சாலை​யும், நடைபாதையும் அமைத்​துள்​ளனர்.

பொது​மக்​களுக்கு அனுமதி கிடை​யாது என்ற நிலை​யில், அங்கு நடைபாதை எதற்கு? இதன்​மூலம் வெள்ள வடிநீரை தடுத்​து​விட்​டால், அந்​தப் பகுதி​யில் தனியார் கட்​டு​மான நிறு​வனங்​கள் கட்​டிடங்​களை கட்​டிக்​கொள்​ளலாம்.

இதற்​காக நடத்​தப்​பட்ட திட்​ட​மிட்ட சூழ்ச்சி இது. இந்த திட்​டத்தை அனுமதித்த அதி​காரி​களை உடனடி​யாக தகுதிநீக்​கம் செய்ய வேண்​டும். நட​வடிக்கை எடுக்​கா​விட்​டால் பல​வகை​யான போராட்​டங்​களை பாமக முன்​னெடுக்​கும். இவ்​வாறு அவர் கூறினார்.

ரூ.50 ஆயிரம் கோடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்க சதித் திட்டம்: அன்புமணி குற்றச்சாட்டு
பள்ளிகளில் விண்வெளி பாடம் இடம் பெற வேண்டும்: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் யோசனை

X