திமுக ஆட்சிக்கு அதிமுக - பாமக மகா கூட்டணி முடிவு கட்டும்: அன்புமணி ஆவேசம்

கடலூரில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

கடலூரில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Updated on
1 min read

கடலூர்: அதிமுக- பாமக மகா கூட்டணி திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். கடலூர் திருப்பாதிரி புலியூரில் நேற்று இரவு பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கட்சியின் தலைவர் அன்புமணி பேசியதாவது: அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த கூட்டணியால் பலருக்கு ஜன்னி வந்துவிட்டது. இந்த மகா கூட்டணியில் பல கட்சிகள் வந்து சேரும். இன்று நமக்கு தொடக்கம், திமுக ஆட்சிக்கு அது முடிவு.

அதிமுக-பாமக மகா கூட்டணி திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும். திமுக ஆட்சியில் 5 வருடங்களாக ஊழல், கஞ்சா, போதை கலாச்சாரத்தால் இளைஞர்களின் வாழ்கை பாழாகி வருகிறது.

அமெரிக்காவில் என்ன போதைபொருள் கிடைக்குமோ, அவை அனைத்தும் தமிழ்நாட்டில் கிடைக்கிறது. குழந்தை முதல் மூதாட்டி வரை இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. நிர்வாக திறமை இல்லாத ஆட்சி திமுக ஆட்சி.

முதல்வர் தினம், தினம் பொய் சொல்லி வருகிறார். முதல்வர் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய துரோகம் 10. 5 சதவீத இட ஒதுக்கீட்டிடை தராதது, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாதது தான். கிராமம் கிராமாக, வீடு வீடாக இதை எடுத்து கூறுங்கள்.

விவசாய நிலத்தை அழித்து எங்களுக்கு எதுவும் வேண்டாம். சாராய ஆலைகளை வைத்திருப்பது திமுககாரர்கள் தான். மணல் கொள்ளை, நகராட்சி துறையில் கொள்ளை என எல்லாற்றையும் அமலாக்கத்துறை கையில் வைத்துள்ளனர்.

புதிய பென்ஷன் திட்டம் மிகப்பெரிய மோசடி. தேர்தல் நேரத்தில் எதற்காக கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குகிறீர்கள். 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியது. மக்கள் தெளிவாக உள்ளனர்.

இனி எடுபடாது. இந்த ஆட்சியை துரத்தி அடியுங்கள். எங்களது மகா கூட்டணிக்கு வாக்களியுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3,500 கொடுப்போம்.

பெண்கள் பாதுகாப்பாக செல்வார்கள். பெண்களுக்கு எதிரான ஆட்சியை அகற்றுங்கள்.ஆட்சி மாற்றத்தை கொண்டு வாருங்கள் என்றார்.

<div class="paragraphs"><p>கடலூரில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.</p></div>
அதிமுக - பாமக கூட்டணி எதிர்பார்த்தது தான்: சீமான் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in