முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராளி கம்பம் அப்பாஸ் மறைவுக்கு அன்புமணி இரங்கல்

கம்பம் அப்பாஸ்

கம்பம் அப்பாஸ்

Updated on: 
1 min read

சென்னை: கம்பம் அப்பாஸை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், முல்லைப் பெரியாறு போராட்டக் குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “முல்லைப் பெரியாறு அணை உரிமைக்காகப் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்திய போராளியும், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவருமான கம்பம் அப்பாஸ் உடல்நலக் குறைவால் காலமானார் என்பதையறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

சிறந்த எழுத்தாளருமான அப்பாஸ், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நூல்களையும் எழுதியவர். கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாத் கமிட்டித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதலில் 142 அடியாகவும், பின்னர் 152 அடியாகவும் உயர்த்த வேண்டும் என்ற 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி கம்பம் கூடலூரில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கொட்டும் மழையில் நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்.

பெரியவர் கம்பம் அப்பாஸை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், முல்லைப் பெரியாறு போராட்டக் குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அன்புமணி கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>கம்பம் அப்பாஸ்</p></div>
“நிர்வாகத் திறமையின்மை... அலட்சியம்”: கைதிகள் தப்பியது குறித்து தினகரன் காட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in