

சென்னை: கடந்த திமுக ஆட்சியில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தர பணம் வசூலித்ததாக 177 பள்ளிகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதில் ரூ.100 கோடி வரை மோசடி நடந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்புடைய 9 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 16-ம் தேதி சோதனை நடத்தினர். 18-ம் தேதி (இன்று) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மனும் வழங்கப்பட்டது. அதன்பேரில், அவர் இன்று ஆஜராவார் என தெரிகிறது.