ராமேசுவரம்: கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி குடும்பத்தினருக்கு அன்பில் மகேஸ் செல்போனில் ஆறுதல்

பள்ளி மாணவி குடும்பத்தினருக்கு நிதியளித்த ராமநாதபுரம் எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம்.

பள்ளி மாணவி குடும்பத்தினருக்கு நிதியளித்த ராமநாதபுரம் எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம்.

Updated on
1 min read

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி குடும்பத்தினரை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

ராமேசுவரம் சேராங்கோட்டை மீனவ கிராமத்தில் பள்ளி மாணவி ஷாலினியை (17) கொலை செய்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் (21) என்பவர் கைது செய்யப்பட்டார். எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும், கரையூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் ஷாலினியின் தங்கை ஷர்மிளாவின் உயர் கல்வி செலவை திமுக ஏற்றுக்கொள்வதாக பெற்றோரிடம் உறுதியளித்தார்.

தொடர்ந்து, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் செல்போன் மூலம் ஷாலினியின் குடும்பத்தினரிடம் பேசி ஆறுதல் தெரிவித்தார். இக்கொலையில் தொடர்புடையவருக்கு நீதிமன்றத்தில் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாதர் சங்க மாவட்ட தலைவர் லட்சுமி, மாவட்ட செயலாளர் ஆரோக்கிய நிர்மலா ஆகியோர், ‘கொலை செய்த இளைஞருக்கு கடும் தண்டனை வழங்குவதற்கு காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

பாமக ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சை.அக்கிம் தலைமையிலான அக்கட்சியினர் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் ஆகியோரிடம் அளித்த மனுவில், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>பள்ளி மாணவி குடும்பத்தினருக்கு நிதியளித்த ராமநாதபுரம் எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம்.</p></div>
ராமேசுவரத்தில் 12-ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக்கொலை: இளைஞர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in