‘அர்னாப்’ புயல் பாதிப்பு: ஏனாம் நிலவரத்தை புதுச்சேரி முதல்வரிடம் கேட்டறிந்தார் அமித் ஷா

‘அர்னாப்’ புயல் பாதிப்பு: ஏனாம் நிலவரத்தை புதுச்சேரி முதல்வரிடம் கேட்டறிந்தார் அமித் ஷா
Updated on: 
1 min read

புதுச்சேரி: அர்னாப் புயலால் ஏனாம் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதல்வர் ரங்கசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் அருகே அர்னாப் புயல் கரையை கடந்தது. இதில் புதுச்சேரி பிராந்தியம் ஏனாம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், அர்னாப் புயலால் ஏற்பட்ட பாதிப்பு, சேதங்கள் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று முதல்வர் ரங்கசாமியிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

அப்போது, முதல்வர் ரங்கசாமி ஏனாமில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விளக்கினார். 101 ஹெக்டேர் நெற்பயிர் முழுவதும் சேதம், 60 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன, 500-க்கும் மேற்பட்ட மரங்கள், 60-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தது, மின்சாரம் மற்றும் இணைய சேவை முழுமையாக துண்டிக்கப்பட்டது குறித்தும் விளக்கினார்.

இதனைக் கேட்டறிந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் புதுச்சேரி அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

‘அர்னாப்’ புயல் பாதிப்பு: ஏனாம் நிலவரத்தை புதுச்சேரி முதல்வரிடம் கேட்டறிந்தார் அமித் ஷா
“அவுட்சோர்சிங் முறையில் அரசுப் பணி நியமனங்கள் சமூக நீதியை காவு கொடுக்கும் செயல்” - அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in