சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம் - பின்புலம் என்ன?

அமல்ராஜ்

அமல்ராஜ்

Updated on
1 min read

சென்னை: சென்னை காவல் ஆணை​ய​ராக இருந்த அபின் தினேஷ் மோடக் மாற்​றப்​பட்டு ஏ.அமல்ராஜ் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்​பேற்​ற​தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி​கள் இடமாற்​றம் செய்​யப்​பட்டு வரு​கின்​றனர்.

அதன் தொடர்ச்​சி​யாக, சென்னை பெருநகர காவல் ஆணை​ய​ராக ஏ.அமல்​ராஜ் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அந்த பதவி​யில் இருந்த அபின் தினேஷ் மோடக், சிபிசிஐடி பிரிவு கூடு​தல் டிஜிபி​யாக பணி​யிட மாற்றம் செய்​யப்​பட்​டுள்​ளார். இதற்​கான உத்​தரவை உள்​துறைச் செயலர் மணி​வாசன் நேற்று பிறப்​பித்​தார்.

சென்​னை​யின் புதிய காவல் ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டுள்ள அமல்​ராஜ், 1996-ம் ஆண்டு தமிழக பிரிவு நேரடி ஐபிஎஸ் அதி​காரி ஆவார். இவர் திருப்​பூர் மாவட்​டத்​தில் உதவி எஸ்​.பி.​யாக பணியைத் தொடங்​கி​னார்.

பின்​னர் எஸ்​.பி.​யாக பதவி உயர்வு பெற்று மதுரை துணை ஆணைய​ராக​வும், தரு​மபுரி, தேனி, காஞ்​சிபுரம், விழுப்​புரம் மாவட்டங்​களில் எஸ்​.பி.​யாக​வும் பணி​யாற்​றி​னார்.

பின்​னர், டிஐஜி​யாக பதவி உயர்வு பெற்று ராம​நாத​புரம், திருச்சி, சேலம் சரகங்​களில் பணி​யாற்​றி​னார். ஐ.ஜி.​யான பிறகு, சேலம், கோவை, திருச்சி மாநகர காவல் ஆணை​ய​ராகப் பணி​யாற்​றி​னார்.

மத்​திய மற்​றும் மேற்கு மண்​டலங்​களின் காவல் தலை​வ​ராக​வும், சென்னை காவல் தலை​மையகத்​தின் கூடு​தல் ஆணை​ய​ராக​வும் பணி​யாற்​றி​னார். தொடர்ந்​து, கூடு​தல் டிஜிபி​யாக பதவி உயர்வு பெற்று தாம்​பரம் காவல் ஆணை​யர், அமலாக்​கப் பிரிவு சிஐடி​யிலும் பணி​யாற்​றி​னார்.

சிறந்த சட்​டம் - ஒழுங்கு அதி​காரி என பெயர் பெற்​றவர். தற்​போது சென்​னை​யின் 112-வது காவல் ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில், கடந்த 1971 நவம்​பர் மாதம் பிறந்​தவர் அமல்​ராஜ்.

நாகர்​கோ​விலில் பள்​ளிப் படிப்​பை​யும், திருச்​சி​யில் இளங்​கலை, முதுகலைப் படிப்​பு​களை​யும் முடித்​தார். காவல் பணி​யில் சேர்ந்த பிறகு, மதுரை காம​ராஜர் பல்​கலைக்​கழகத்​தில் மனிதவள மேலாண்​மை​யில் எம்​பிஏ பட்​ட​மும், முனை​வர் பட்​டமும் பெற்​றுள்​ளார்.

மாநிலக் காவல் துறை விளை​யாட்​டுப் போட்​டிகளில் துப்​பாக்கி சுடும் பிரி​வில் சாம்​பியன் பட்​டம் வென்​றுள்​ளார். இலக்​கி​யத்​தி​லும் மிகுந்த ஆர்​வம் கொண்​ட​வர்.

காவல் துறை​யினருக்கு வெற்றி தரும் மேலாண்மை பண்​பு​கள், வெற்​றி​யாளர்​களின் வெற்​றிப்​படிகள், வெல்ல நினைத்​தால் வெல்​லலாம், சிறகு​கள் விரித்​திடுக, போராட கற்​றுக்​கொள் ஆகிய 5 நூல்​களை எழுதி உள்​ளார்.

முதல்​வர் பதக்கம்

சிறப்​புமிக்க சேவைக்​கான குடியரசுத் தலை​வர் பதக்​கம், மெச்​சத்​தக்க சேவைக்​கான காவல் துறை பதக்​கம், முதல்​வரின் சிறப்​புச் செயல்​பாடு பதக்​கம் மற்​றும் பொதுச் சேவை​யில் சிறந்து விளங்​கியமைக்​கான முதல்​வரின் பதக்​கம்​ ஆகிய​வற்​றை​யும்​ பெற்​றுள்​ளார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>அமல்ராஜ்</p></div>
புதிதாக பொறுப்பேற்ற 23 அமைச்சர்களின் விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in