வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதாக குற்றச்சாட்டு

வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்கை தூய்மைப்பணியாளர் பொருத்துவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் படம்.

வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்கை தூய்மைப்பணியாளர் பொருத்துவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் படம்.

Updated on
1 min read

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரம் மாவட்​டம் வாலாஜா​பாத் அரசு மருத்​து​வ​மனை​யில் நோயாளிக்கு ஒப்​பந்த தூய்​மைப் பணி​யாளர்​கள் மூலம் ஆக்​சிஜன் மாஸ்க் பொருத்​தப்​படும் வீடியோ காட்​சிகள் வெளி​யாகி அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

வாலாஜா​பாத் அரசு மருத்துவமனைக்கு நூற்​றுக்​கணக்​கானோர் தினசரி சிகிச்​சைக்​காக வந்து செல்​கின்​றனர். இங்கு நேற்று முன்​தினம் இரவு தீவிர மூச்​சுத்​திணறல் காரண​மாக நோயாளி ஒரு​வர் அவசர சிகிச்​சைப் பிரிவுக்கு அழைத்து வரப்​பட்​டுள்​ளார்.

அப்​போது அங்கு பணியி​லிருந்த ஒப்​பந்த தூய்​மைப் பணி​யாளர்​களைக் கொண்டு அவருக்கு ரத்த அழுத்​தம் மற்​றும் நாடித்​துடிப்பு பரிசோதனை செய்​யப்​பட்​டு, ஆக்​ஸிஜன் மாஸ்க் வைப்பது போன்ற காட்​சிகள் அடங்​கிய வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி வரு​கிறது.

உரிய மருத்​து​வப் பயிற்சி இல்​லாத நபர்​களைக் கொண்டு அவசர சிகிச்சை அளிக்​கும் இத்​தகைய செயல் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாக அப்​பகுதி மக்​கள் கூறுகின்றனர்.

எனவே, அலட்​சி​ய​மாகச் செயல்​பட்ட மருத்​து​வ​மனை நிர்​வாகம், பணி​யாளர்​கள் மீது மாவட்ட நிர்​வாக​மும், மக்​கள் நல்​வாழ்​வுத் துறை​யும் உரிய விசா​ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​றும் வலி​யுறுத்​துகின்​றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்​சி​யர் கூறும்​போது, “இதுகுறித்து 15 நாட்​களுக்​குள் விளக்​கம் அளிக்​கக்​கோரி நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. அதன் பிறகு உரிய நடவடிக்​கை எடுக்​கப்​படும்​” என்​றார்​.

<div class="paragraphs"><p>வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்கை தூய்மைப்பணியாளர் பொருத்துவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் படம்.</p></div>
வடபழனி முருகன் கோயிலில் செப்.1 முதல் செல்போனுக்கு தடை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in