

கரூர்: தவெக பிரச்சாரக் கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரத்தில் உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி ஆய்வு செய்தார். மேலும் தவெக அனுமதி கேட்ட உழவர் சந்தை, லைட்ஹவுஸ் முனை, பேருந்து நிலைய ரவுண்டானாவிலும் ஆய்வு செய்தார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்ப ட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் அக்.13-ம் தேதி உத்தரவிட்டது.
அப்போது உச்ச நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, ஏடிஜிபிக்கள் சோனல் வி.மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் மேற்பார்வையில் சிபிஐ அதிகாரி பிரவீண்குமார் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
அக்.16-ம் தேதி சிபிஐ கரூர் வந்த நிலையில் அக்.17-ம் தேதி எஸ்ஐடி ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தது.
இவ்வழக்கில் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியும், போனில் அழைத்தும், நேரில் சென்றும் கடந்த அக்.30-ம் தேதி முதல் வேலுசாமிபுரத்தில் கடைவைத்திருப்பவர்கள், ஆம்புலன்ஸ் உரிமையாள ர்கள், ஓட்டுநர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், பவர் கிரிட், மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பாக கருத்து கள் பதிவிட்டவர்கள், கரூர் நகர இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி செல்வராஜ் தவெக தலைவர்களிடம் விசாரணை நடைபெற்றது.
சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட உச்சநீதிமன்ற ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி, ஏடிஜிபிக்கள் சோனல் வி.மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் நேற்று வருகை தந்தனர். இதனையொட்டி சிபிஐ டிஐஜி அது ல்குமார் தாக்கூர் நேற்று முன்தினம் கரூர் வந்தார்.
சிபிஐயினர் தங்கி விசாரணை நடத்தி வரும் கரூர் சுற்றுலா மாளிகை முகாம் அலுவலகத்திற்கு சிபிஐ டிஐஜி அதுல்குமார் தாக்கூர் விசாரணை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு ஆவணங்களை பார்வையிட்டார் தெரிகிறது. தொடர்ந்து கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சார கூட்டம் நடந்த இடத்தை பார்வையிட்டார்.
கரூர் சுற்றுலா மாளிகை சிபிஐ முகாம் அலுவலகத்தில ஒய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி, ஏடிஜிபிக்கள் சோல் வி.மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் நேற்று வருகை நந்தனர். ஆட்சியர் மீ.தங்கவேல், ஐஜி ஜோஷ் நிர்மல்குமார், எஸ்பி கே.ஜோஷ்தங்கையாக ஆகியோர் ஆஜராகி சம்பவம் குறித்து விளக்கம் அளித்தனர்.
பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள், காயமடைந்தவர்கள், தவெகவினர் ஆஜராகினர். இதில் நேரமின்மையால் சிலரை இன்று (டிச. 3ம் தேதி) ஆஜராகக்கூறி அனுப்பி வைத்தனர்.
கரூர் சுற்றுலா மாளிகைக்கு இன்று (டிச. 3ம் தேதி) 2வது நாளாக உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி கோவையில் இருந்து கார் மூலம் வருகை தந்தார். இதையடுத்து ஏடிஜிபிக்கள் சோனல் வி.மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் வருகை தந்தனர். மனு அளிக்க வந்து நேற்று திருப்பியப்னுப்பட்ட சிவா, கட்சி நிர்வாகி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
இந்நிலையில் ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி, தவெக பிரச்சார கூட்டம் நடைபெற்று 41 பேர் உயிரிழந்த கரூர் வேலுசாமிபுரத்தை பார்வையிட்டார். சுமார் 20 நிமிடங்கள் அங்கிருந்தவரிடம் டிஐஜி அதுல் குமார் தாக்கூர், எஸ்.பி. பிரவீண்குமார், கரூர் எஸ்.பி. கே.ஜோஷ் தங்கையா ஆகியோர் சம்பவம் குறித்து விளக்கினர்.
அதன்பின் தவெக அனுமதி கேட்ட கரூர் உழவர் சந்தை, கரூர் லைட்ஹவுஸ் முனை, கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா ஆகியஇடங்களையும் பார்வையிட்டார். லைட்ஹவுஸ் முனையில் பெட்ரோல் பங்க், அமராவதி ஆறு உள்ளிட்டவை இருப்பது குறித்தும் விளக்கப்பட்டது. கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை பார்வையிடும் போது திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜோஷி நிர்மல்குமார் வந்து இணைந்து கொண்டார்.
இதையடுத்துஅஜய் ரஸ்டோகி கரூர் சுற்றுலா மாளிகைக்கு திரும்பினார். சிபிஐ விசாரணைக்கு பிரேதப் பரிசோதனை செய்த 4 மருத்துவர்கள் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
கரூர் எஸ்.பி. கே.ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பிக்களிடம் 2வது நாளாக 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது.