மகளிர் சுய உதவிக் குழு தொடங்கியது யார்? - அதிமுக - திமுக விவாதம்

மகளிர் சுய உதவிக் குழு தொடங்கியது யார்? - அதிமுக - திமுக  விவாதம்
Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் நேற்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்​தின்​போது அதி​முக எம்​எல்ஏ எஸ்​.பி.வேலுமணி பேசும்​போது, “தி​முக எம்​எல்ஏ ஒரு தவறான கருத்தை பதிவு செய்​தார்.

மகளிர் சுய உதவிக் குழுக்​களை முதன்​முதலில் 1983-ல் தரு​மபுரி​யில் தொடங்​கியது எம்​ஜிஆர்​தான். மகளிர் குழுக்​களுக்​கான வங்​கிக்​கடன் 2006-2011 திமுக ஆட்​சி​யில் ரூ.9,898 கோடி மட்டுமே வழங்​கப்​பட்​டது.

2011-2021 வரையிலான அதி​முக ஆட்​சி​யில் ரூ.83,000 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது”என்​றார். அதற்கு திமுக எம்​எல்ஏ கே.என்​.நேரு, “1989-ல் தரு​மபுரிக்கு சென்று மகளிர் சுய உதவிக்​குழுவை ஆரம்பித்து வைத்​தது கருணாநி​திதான்.

ஆனால், எஸ்​.பி.வேலுமணி 1983 என்று கூறுகிறார். இதுகுறித்து ​பேர​வை​யில் பலமுறை விவா​திக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், தற்​போது வேலுமணி புதி​தாக எம்​ஜிஆர் தொடங்​கியதாக மீண்​டும் பேசுகிறார்” என்று தெரிவித்தார்.

மகளிர் சுய உதவிக் குழு தொடங்கியது யார்? - அதிமுக - திமுக  விவாதம்
எம்எல்ஏக்களுக்கு கடன் வாங்கி கார் எதற்கு? - முதல்வருக்கு சீமான் கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in