மாற்று கட்சிகளில் இருந்து வந்தோருக்கு ‘சீட்’ இல்லை: உள்ளாட்சி தேர்தலுக்காக தவெகவில் இணைந்த அதிமுகவினர் ஏமாற்றம்

மாற்று கட்சிகளில் இருந்து வந்தோருக்கு ‘சீட்’ இல்லை: உள்ளாட்சி தேர்தலுக்காக தவெகவில் இணைந்த அதிமுகவினர் ஏமாற்றம்
Updated on
1 min read

மதுரை: உள்ளாட்சித் தேர்தலைக் குறி வைத்து மாற்றுக் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்தவர்களுக்கு ‘சீட்’ வழங்கப்பட மாட்டாது என்றும், சொந்தக் கட்சியினருக்கு ‘சீட்’ கொடுத்து அவர்களை கவுன்சிலராக்கும் திட்டம் இருப்பதாகவும் பரவும் தகவலால் கட்சி மாறிய அதிமுக நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்லையும் எதிர்கால அரசியல் வாழ்க்கை யையும் மனதில் வைத்து அதிமுக மட்டுமின்றி பல்வேறு கட்சிகளில் இருந்து ஏராளமானோர் தற்போது தவெக-வில் இணைகின்றனர். மதுரை மாவட்டத்திலும் பலர் தவெக-வில் இணைந்துள்ளனர்.

இணைந்தவர்களில் பெரும்பாலானோர் மாநகர அதிமு கவைச் சேர்ந்தவர்கள். அதிலும் சிலர் செல்லூர் ராஜூவுக்கு மிக நெருக்கமானவர்கள். அப்படியிருந்தும் இவர்களை சமாதானம் செய்து தடுக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முயற்சி செய்யவில்லை.

இணைந்தவர்கள் தங்கள் வாரிசுகளுக்காகவும், எதிர்கால அரசியலுக்காகவும் தவெக-வுக்கு தாவியதாக செல்லூர் ராஜூவிடம் பேசிவிட்டே சென்றனர்.

அதனால், செல்லூர் ராஜூகூட தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், ‘‘ஏப்பா, ஏய் எத்தனை கட்சி யிலப்பா சேருவீங்க, நான் என்றும் புரட்சித்தலைவர், புரட்சித் தலைவி அம்மா அவர் களின் வழியில்தான்’’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தவெகவில் இணைந்த அதிமுகவின ருக்கு அங்கு போது மான முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்று கட்சி தாவிய நிர்வாகிகள் புலம்பத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து சென்றவர்கள் மாவட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்கள், கிளை, ஒன்றிய நிர்வாகிகளாக கவுரவமாக கட்சிக்குள் வலம் வந்தவர்கள். ஆனால், கட்சி தாவிய அவர்களுக்கு தற்போது வரை அங்கு பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை.

தவெக நிர்வாகிகள் இவர்களுக்கு அரசியல் அனுபவத்தை கொண்டு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது.

அடுத்து வர உள்ள உள்ளாட்சித் தேர்தலில் ‘சீட்’ பெற்று அக்கட்சியில் முக்கியத்துவம் பெறுவதும், அதற்குப் பிறகு அடுத்தடுத்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் ‘சீட்’ பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே அதிமு கவில் இருந்து இவர்கள் தவெக-வில் இணைந்தனர்.

ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் முழுக்க முழுக்க தவெக-வினருக்கு மட்டுமே ‘சீட்’ கொடுத்து கவுன்சிலர்களாக்க வேண்டும் என்றும் மாற்றுக் கட்சியினருக்கு வேண்டுமென்றால் கட்சிப் பொறுப்புகள் கொடுக் கலாம் என்ற முடிவுக்கு வந் துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு உதாரணமாக அதிமுகவில் இருந்து ஆதரவு கொடுத்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் வாய்ப்பு கொடுக்காததால் அவர்கள் மீண்டும் பழனிசாமி பக்கமே திரும்பியதும் நடந்தது.

தற்போது மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் ‘சீட்’ கிடைக்க வாய்ப் பில்லை என்று பரவும் இந்தத் தகவலால் மதுரை மாநகர அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு சென்றவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மீண்டும் அதிமுகவுக்கு வர முடியாமலும் நம்பிக்கையில்லாமலும் தவெகவில் தொடர்வதாகக் கூறப்படுகிறது.

மாற்று கட்சிகளில் இருந்து வந்தோருக்கு ‘சீட்’ இல்லை: உள்ளாட்சி தேர்தலுக்காக தவெகவில் இணைந்த அதிமுகவினர் ஏமாற்றம்
இவர் நம்ம ஆளு... ‘திரைக்கதை மன்னன்’ கே.பாக்யராஜ் முத்திரைப் பதித்த படைப்புகள்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in