கரூரில் விதிகளை மீறி மனிதப் பட்டிகள்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்

கரூரில் விதிகளை மீறி மனிதப் பட்டிகள்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்
Updated on
1 min read

சென்னை: கரூரில் விதி​களை மீறி மனிதப் பட்​டிகள் அமைக்​கப்​படு​வ​தாக தலைமைத் தேர்​தல் அதி​காரி​யிடம் அதி​முக புகார் அளித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை தலை​மைச் செயல​கத்​தில் தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக்​கிடம் அதி​முக எம்​.பி. இன்​பதுரை, முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ஆகியோர் புகார் கொடுத்​தனர்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர்​கள் கூறிய​தாவது: கரூரில் இதற்கு முன்பு 40 பட்​டிகள் அமைத்து வைத்​திருந்​தனர். தற்​போது 120-க்​கும் அதி​க​மான மனிதப் பட்​டிகள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. ஏசி வசதி ஏற்​பாடு செய்து மக்​களை அங்கு அழைத்து அமர வைக்க ஏற்​பாடு செய்​கின்​றனர்.

ஒவ்​வொரு வார்​டுக்​கும் ஒவ்​வொரு ஷெட் அமைத்து செயல் ​படுத்​துகின்​றனர். இதை தேர்​தல் அதி​காரி​கள் கண்​டு​கொள்​வ​தில்​லை. 50 ஆயிரம் நாற்​காலிகள் ஏற்​பாடு செய்து பட்​டிகளுக்கு பயன்​படுத்தி உள்​ளனர்.

தின​மும் காலை​யில் இருந்து மாலை வரை அவர்​கள் அங்கு தான் இருக்க வேண்​டும் என்று கட்​டாயப்​படுத்​துகின்​றனர். 120 ஷெட்​களை​யும் போட்டோ எடுத்து கொடுத்​துள்​ளோம். திடீர் சோதனை மேற்​கொண்​ட​போது அதை திடீர் ஓட்​டலாக மாற்​றி​விட்​டனர்.

ஒரு ஓட்​டல் வைக்க வேண்​டுமென்​றால் அதற்கு முன்​அனு​மதி பெற வேண்​டும். ஆனால் அப்​படி எது​வும் பெற​வில்​லை. சட்​டங்​கள் வெறும் பேப்​பரில் மட்​டுமே உள்​ளது. செயல்​படுத்​தப்​படு​வது இல்​லை.

‘இது எங்​கள் பட்​டி​தான்’ என்று செந்​தில் பாலாஜி பேசும் பேட்​டிகூட உள்​ளது. கரூரில் திமுக ஆதரவு அதி​காரி​கள் இன்​னும் உள்​ளனர். கரூரில் உள்ள அதி​காரி​களை மாற்ற வேண்​டும். இதே நிலை நீடித்​தால் கரூரில் ஒரு தலை​பட்​ச​மான தேர்​தல்​தான் நடக்​கும். அளவுக்கு அதி​க​மான பணம் வழங்​கப்​படு​கிறது. இதுதொடர்​பாக புகார் அளித்​துள்​ளோம்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

கரூரில் விதிகளை மீறி மனிதப் பட்டிகள்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்
சென்னையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மார்ச் 28-ல் முதல்கட்ட பயிற்சி: மாவட்டத் தேர்தல் அலுவலர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in