சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் பதற்றமாக அறிவித்ததை சாதாரண வாக்குச்சாவடிகளாக மாற்றுவதா? - அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக வலியுறுத்தல்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் பதற்றமாக அறிவித்ததை சாதாரண வாக்குச்சாவடிகளாக மாற்றுவதா? - அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: துணை முதல்​வர் உதயநிதி போட்​டி​யிடும் சேப்பாக்​கம்​-​திரு​வல்​லிக்​கேணி தொகு​தி​யில், பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகள் நீக்​கப்​பட்​டுள்ள​தால், தொடர்​புடைய அதி​காரி​களை பணி​யிட​மாற்​றம் செய்ய வேண்​டும் என்​று, தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் அதி​முக மனு அளித்துள்​ளது.

அதி​முக எம்பி ஐ.எஸ்​.இன்​பதுரை, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக்​கிடம் புகார் மனு ஒன்றை அளித்​தார். பின்​னர், அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தொகு​தி​யில் புது​மை​யான முறை​கேடு நடந்​துள்​ளது. அங்கு பதற்​றம் நிறைந்த வாக்​குச்சாவடிகள் அடை​யாளம் கண்​டறியப்​பட்டு இருந்​தது.

தற்​போது அது நீக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்​தலில் 22 வாக்​குச் சாவடிகள் பதற்​ற​மானவை. அங்கு வாக்​குச் சாவடியை கைப்​பற்ற வாய்ப்​புள்​ளது என தேர்​தல் அதி​காரி அறி​வித்​துள்​ளார். ஆனால், அது அப்​படியே நீக்​கப்​பட்​டுள்​ளது.

ஏற்​க​னவே, இது குறித்து எங்​களது சேப்பாக்கம் - திரு​வல்​லிகேணி வேட்​பாளர் ஆதி ராஜா​ராம் மனு அளித்​தார். குறிப்​பாக, 116-வது வார்​டில் உள்ள கவுன்​சிலர் காம​ராஜ் பெயர், பதிவேடு குற்​ற​வாளி பட்​டியலில் உள்​ளது.

இவை அனைத்​தும் கடந்த மக்​களவை தேர்​தலின் போதே அங்​குள்ள தேர்​தல் அதி​காரி தெரி​வித்​துள்​ளார். இப்​போது அங்கு உள்​ளவர்​கள் எல்​லாம் புனித​மானவர்​களாக ஆகி​விட்​டார்​களா? பதற்​ற​மான வாக்​குச் சாவடிகள் அனைத்​தும் சாதா​ரண​மான​தாக மாறி​விட்​ட​தா? ஒவ்​வொரு தேர்​தலின் போதும் கலவரம் நடக்​கக் கூடிய வாக்​குச் சாவடிகள் அவை.

அதனால், மக்​களுக்கு நம்​பிக்கை தரும் வகை​யில் மத்​திய படை​யினர் 24 மணி நேரம் கண்​காணிப்​பில் இருப்​பார்​கள். ஆனால், இந்த முறை துணை முதல்​வர் உதயநிதி போட்​டி​யிடும் தொகுதி என்​ப​தால் அது மாற்​றப்​பட்​டுள்​ளதோ என எங்​களுக்கு சந்​தேகம் எழுந்​துள்​ளது. இதற்கு காரணமான அதிகாரி​களை மாற்ற வேண்​டும் என புகார் அளித்​திருக்​கிறோம்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் பதற்றமாக அறிவித்ததை சாதாரண வாக்குச்சாவடிகளாக மாற்றுவதா? - அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக வலியுறுத்தல்
ஊட்டி மலை ரயில் பாதையில் முகாமிட்ட யானைகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in