அதிமுக கூட்டணியில் ஐஜேகேவுக்கு 2, தமமுக, புரட்சி பாரதத்துக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு

அதிமுக கூட்டணியில் ஐஜேகேவுக்கு 2, தமமுக, புரட்சி பாரதத்துக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு
Updated on
1 min read

சென்னை: அதிமுக கூட்டணியில் ஐஜேகேவுக்கு 2, தமமுக, புரட்சி பாரதத்துக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 5 தொகுதிகளிலும் தமாகா தாமரை சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள், ஜான் பாண்டியனின் தமமுகவுக்கு 1 மற்றும் புரட்சி பாரதம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, திருமாறனின் தென்னிந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு இதுவரை தொகுதிப் பங்கீடு நிறைவடையவில்லை.

இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியின் தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதிமுக கூட்டணியில் ஐஜேகேவுக்கு 2, தமமுக, புரட்சி பாரதத்துக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு
அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: எடப்பாடியில் பழனிசாமி, தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணி போட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in