சித்த மருத்துவம் மூலம் காசநோயை ஒழிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

சித்த மருத்துவம் மூலம் காசநோயை ஒழிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
Updated on
1 min read

சென்னை: இந்​தி​யா​வில் காசநோயை முற்​றி​லு​மாக ஒழிக்க மத்​திய சித்த மருத்​துவ ஆராய்ச்சி குழு​மத்​துடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் போடப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வில் காசநோயை முழு​மை​யாக ஒழிக்​கும் நோக்​கில் மத்​திய, மாநில அரசுகள் பல்​வேறு முயற்​சிகளை எடுத்து வரு​கின்​றன. அதன்​படி, நோயாளி​களைக் கண்​டறிதல், கூட்டு மருந்து சிகிச்சை அளித்​தல், தொடர் கண்​காணிப்பு நடவடிக்​கைகள் எடுத்​தல் என காசநோய் ஒழிப்​புத் திட்ட பணி​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன. சிகிச்சை நெறி​முறை​களின்​படி அவர்​களது வீட்​டிலேயே சளி மாதிரி எடுப்​பதுடன், தேவைப்​படு​பவர்​களுக்கு நடமாடும் ஊடு​க​திர் கருவி​களை அவர்​களின் இருப்​பிடங்​களுக்கே அனுப்பி ஊடு​க​திர் படம் எடுக்​கப்​படுகிறது.

இந்​நிலை​யில், காசநோயை முற்​றி​லு​மாக ஒழிக்க ஐசிஎம்​ஆர் - தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறு​வனம், மத்​திய அரசின் ஆயுஷ் அமைச்​கத்​தின்​கீழ் உள்ள, மத்​திய சித்த மருத்​துவ ஆராய்ச்சி குழு​மம் இணைந்து செயல்​படும் வகை​யில், புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் போடப்​பட்​டுள்​ளது.

இதில், மத்​திய சித்த மருத்​துவ ஆராய்ச்சி குழும தலைமை இயக்​குநர் நா.ஜெ.​முத்​துகு​மார், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன இயக்​குநர் ஸ்ரீநாத் சத்​ய​நா​ராயணா ஆகியோர் கையெழுத்​திட்​டனர். பாரம்​பரிய சித்த மருத்​து​வத்​தின் மூல​மாக காசநோய்க்​கான மருத்​துவ பரிசோதனை​கள், மேம்​பட்டபுது​மை​யான மருந்​துகள், திறன்​களை கட்​டமைத்​தல், ஊட்​டச்​சத்து வழங்​கல் ஆகிய​வற்​றில் இரு துறை​களின் நிபுணர்​களும் இணைந்​து பணி​யாற்​றவுள்​ளனர்​.

சித்த மருத்துவம் மூலம் காசநோயை ஒழிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
“ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் மீதான கடற்படை முற்றுகை தொடரும்” - ட்ரம்ப் திட்டவட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in