திருப்போரூர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை: 50+ கடைகளைக் கட்டி உள்வாடகைக்கு விட்டவரின் ஒப்பந்தம் ரத்து

அமைச்சர் ரமேஷ் உத்தரவு
திருப்போரூர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை: 50+ கடைகளைக் கட்டி உள்வாடகைக்கு விட்டவரின் ஒப்பந்தம் ரத்து
Updated on: 
1 min read

சென்னை: ​திருப்போரூர் செங்​கண்​மாலீஸ்​வரர் கோயிலுக்​குச் சொந்​த​மான நிலத்​தில், 50-க்​கும் மேற்​பட்ட கடைகளைக் கட்டி உள்​வாடகைக்கு விட்ட குத்​தகை​தா​ரரின் ஒப்​பந்​தத்தை ரத்​துசெய்து அறநிலை​யத் துறை அமைச்​சர் ரமேஷ் உத்​தர​விட்​டுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: செங்​கல்​பட்டு மாவட்​டம் திருப்போரூர் செங்​கண்​மாலீஸ்​வரர் கோயிலுக்​குச் சொந்​த​மான 2.30 ஏக்​கர் நிலத்தை மீட்​ப​தற்​கான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

அக்​கோ​யிலுக்​குச் சொந்​த​மான நிலத்தை குத்​தகைக்கு எடுத்த நம்​பி​ராஜ் என்​பவர் குத்​தகை ஒப்​பந்த நிபந்​தனை​களை மீறி, சட்ட விதி​களுக்​குப் புறம்​பாக கோயில் நிர்​வாகத்​தின் அனு​ம​தி​யின்றி 50-க்​கும் மேற்​பட்ட கடைகளைக் கட்டி அவற்​றைச் சட்​ட​விரோத​மாக உள்​வாடகைக்கு விட்​டுள்​ளது தெரிய​வந்​தது.

இவ்​விவ​காரம் அறநிலை​யத்துறை​யின் கவனத்​துக்​குக் கொண்​டு​வரப்​பட்​ட​வுடன், உரிய நடவடிக்கை மேற்​கொள்ள அறி​வுறுத்​தப்​பட்​டது. அதன்​படி சம்​பந்​தப்​பட்​ட​வருக்​கான குத்​தகையை ரத்​துசெய்​து, நிலத்தை கோயில் வசம் ஒப்​படைக்க அறி​விப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதன் தொடர்ச்​சி​யாக நேற்று முன்​தினம் கூடு​தல் ஆணை​யர் ரத்னா தலை​மை​யில், நில அளவையர்​களைக் கொண்டு கோயில் நிலம் முழு​மை​யாக அளவீடு செய்​யப்​பட்டு வரு​கிறது.

இந்​நட​வடிக்​கை​யின் மூலம் கோயிலுக்​குச் சொந்​த​மான நிலத்தை மீட்​ப​தற்​கான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்பட உள்​ளன. கோயில்​களுக்​குச் சொந்​த​மான சொத்​துகளைப் பாது​காத்​தல், ஆக்​கிரமிப்​பு​களை அகற்றி கோயில் வசம் சுவாதீனம் பெறு​தல் ஆகிய நடவடிக்​கைகளை இந்து சமய அறநிலை​யத்​துறை தொடர்ந்து மேற்​கொண்டு வரு​கிறது என்று அதில் கூறப்​பட்​டுள்​ளது.

திருப்போரூர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை: 50+ கடைகளைக் கட்டி உள்வாடகைக்கு விட்டவரின் ஒப்பந்தம் ரத்து
அன்பில் மகேஸிடம் 2-வது நாளாக விசாரணை: ரூ.400 கோடி முறைகேடு வழக்கில் மேலும் பலர் சிக்குகிறார்கள்

X