நாட்டின் பாதுகாப்புக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுங்கள்: புதிய ராணுவ அதிகாரிகளுக்கு அறிவுரை

பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.படங்கள்: எம்.முத்துகணேஷ்

பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.படங்கள்: எம்.முத்துகணேஷ்

Updated on
1 min read

பரங்கிமலை: பரங்​கிமலை ராணுவ அதி​காரி​கள் பயிற்சி அகாட​மி​யில் நேற்று நடை​பெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்​பில் 342 அதி​காரி பயிற்சி மாண​வர்​கள், இந்​திய ராணுவத்​தின் அதி​காரி​களாகப் பணி​யில் இணைந்​தனர். இவர்​களில் 313 ஆண்​கள், 29 பெண்​கள் அடங்​கு​வர். இந்​தி​யா​வின் நட்பு நாடு​களைச் சேர்ந்த 17 அதி​காரி பயிற்சி மாண​வர்​களும் தங்​களது பயிற்​சியை நிறைவு செய்​தனர்.

பரங்​கிமலை ராணுவ அதி​காரி​கள் பயிற்சி அகாட​மி​யின் பரமேஸ்​வரன் அணிவகுப்பு மைதானத்​தில் விழா நேற்று நடை​பெற்​றது. குறுகிய கால சேவைப் பிரி​வின் 122-வது அணி​யினர் மற்​றும் பெண்​களுக்​கான குறுகிய கால சேவைப் பிரி​வின் 36-வது அணி​யினரின் பயிற்சி நிறைவு விழா​வாக அமைந்​தது. பல மாதங்​களாக கடுமை​யான ராணுவப் பயிற்​சியை மேற்​கொண்ட அதி​காரி பயிற்சி மாண​வர்​கள், ராணுவ இசைக்கு ஏற்ப கச்​சித​மான ஒருங்​கிணைப்​புடன் அணிவகுத்​துச் சென்​ற​னர். அவர்​களின் ஒழுக்​கம், கட்​டுப்​பாடு மற்​றும் அணிவகுப்பு நேர்த்தி பார்​வை​யாளர்​களை கவர்ந்​தது.

இந்​திய கடற்​படைத் தளபதி அட்​மிரல் கிருஷ்ண சுவாமி​நாதன் அணிவகுப்பை பார்​வை​யிட்​டு, பயிற்​சியை நிறைவு செய்த புதிய அதி​காரி​களுக்கு வாழ்த்து தெரி​வித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: நாட்​டின் நலனுக்கு எப்​போதும் முன்​னுரிமை அளித்​து, தங்​களுக்கு வழங்​கப்​படும் பொறுப்​பு​களை முழு அர்ப்​பணிப்​புடன் நிறை​வேற்ற வேண்​டும், மாறிவ​ரும் பாது​காப்​புச் சூழல் மற்​றும் வேக​மாக வளர்ந்து வரும் தொழில்​நுட்​பத்​துக்கு ஏற்ப ராணுவ அதி​காரி​கள் தங்​களது அறிவை​யும் திறன்​களை​யும் தொடர்ந்து மேம்​படுத்​திக் கொள்ள வேண்​டும்.

தொழில்​நுட்​பக் கருவி​கள், முடி​வெடுக்​கும் செயல்​முறைக்கு உதவி​னாலும், அதி​காரி​கள் தங்​களது சுய சிந்​தனை மற்​றும் பகுத்​தறி​யும் திறனை அவற்​றிடம் ஒப்​படைத்​து​விடக் கூடாது. எதிர்​கால பாது​காப்​புச் சவால்​களை எதிர்​கொள்ள முப்​படைகளுக்​கும் இடையி​லான ஒருங்​கிணைப்பு முக்​கி​யம் என்​றார்.

அணிவகுப்​பைத் தொடர்ந்து நடை​பெற்ற அடை​யாளச் சின்​னம் அணிவிக்​கும் நிகழ்​வில், புதிய அதி​காரி​களின் தோள்​களில் அவர​வர் ராணுவப் பிரி​வு​களின் சின்​னங்​கள் அணிவிக்​கப்​பட்​டன. இதையடுத்​து, இந்​திய அரசி​யலமைப்​புக்கு உண்​மை​யாக இருந்​து, எந்​தச் சூழ்​நிலை​யிலும் நாட்​டைப் பாது​காப்​ப​தாக அவர்​கள் உறு​தி​மொழி ஏற்​ற​னர்.

சீஷெல்ஸ், தான்​சானியா, உகாண்டா, ஜிம்​பாப்வே, எஸ்வாட்​டினி, பூட்​டான், லெசோத்தோ பேரரசு ஆகிய நாடு​களைச் சேர்ந்த 7 ஆண், 10 பெண் அதி​காரி பயிற்சி மாண​வர்​களும் பயிற்​சியை நிறைவு செய்​தனர். இது இந்​தி​யா​வுக்​கும் அந்த நாடு​களுக்​கும் இடையி​லான பாது​காப்பு ஒத்​துழைப்பு மற்​றும் நல்​லுறவை வெளிப்​படுத்​து​வ​தாக அமைந்​தது. விழா​வில் அதி​காரி பயிற்சி மாண​வர்​களின் பெற்​றோர், முக்​கியப் பிர​முகர்​கள் மற்​றும் தூதரகப் பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​ற​னர்.

பயிற்​சி​யில் சிறந்து விளங்​கிய அதி​காரி​களுக்கு விருதுகள் வழங்​கப்​பட்​டன. குர்​கீரத் சிங் ஹோரா​வுக்கு ‘கௌரவ வாள்’ மற்​றும் வெண்​கலப் பதக்​கம் வழங்​கப்​பட்​டது. அபினவ் சௌஹானுக்கு அதி​காரி​கள் பயிற்சி அகாடமி தங்​கப் பதக்​க​மும்​, நிகெட்​ சிங்​ தோமருக்​கு வெள்​ளிப்​ பதக்​க​மும்​ வழங்​கப்​பட்​டன.

<div class="paragraphs"><p>பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.படங்கள்: எம்.முத்துகணேஷ்</p></div>
திருச்சூர் அருகே லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து: திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பரிதாப உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in