நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்தின் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா வழக்கு

சட்டப்பேரவைச் செயலர் பதிலளிக்க உத்தரவு
நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்தின் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா வழக்கு
Updated on
1 min read

சென்னை: மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தும் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா தொடர்ந்துள்ள வழக்கில், தமிழக சட்டப்பேரவைச் செயலர், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 19 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் கோரிக்கையை ஏற்று, இது தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கட்சிகள் எதிர்ப்பு

இதற்கு அப்போதே அதிமுக, பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சிறப்பு தீர்மானம் தொடர்பாக ஜூன் 18-ம் தேதி எம்எல்ஏ-க்களுக்கு அனுப்பப்பட்ட தீர்மான நகலில் இடம்பெறாத திருத்தத்தின் மீது எந்தவொரு விவாதமும் நடத்தப்படாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த திருத்தம் ஒருமனதாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறி, மத்திய அரசுக்கு அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே நடுவர் மன்றம் தொடர்பான அந்த திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலர், சட்டப்பேரவைச் செயலர் மற்றும் மத்திய ஜல்சக்தி துறைச் செயலர் உள்ளிட் டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்தின் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா வழக்கு
அண்ணாமலை பக்கம் சென்ற நிர்வாகிகளால் பாஜகவில் காலியான பதவிகளை நிரப்ப முடிவு: நயினார் நாகேந்திரன் நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in