பழனிசாமி தலைமையில் தஞ்சையில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

Updated on
1 min read

தஞ்சாவூர்: விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகேதாட்டு பிரச்சினையில் மெத்தனம் காட்டி வருவதுடன், காவிரியில் தமிழகத்துக்கு பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத தவெக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இன்று (ஆக.14) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு இன்று காலை 9.30 மணியளவில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமை வகித்துப் பேசுகிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அக்கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p><strong>அதிமுக பொதுச்செயலாளர்&nbsp;எடப்பாடி பழனிசாமி</strong></p></div>
சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு: மாநகராட்சி நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in