அதிமுக 15ம் தேதி, பாமக 14-ல் - விருப்ப மனு விறுவிறு…

அதிமுக 15ம் தேதி, பாமக 14-ல் - விருப்ப மனு விறுவிறு…
Updated on
1 min read

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் அதற்கான விருப்ப மனு படிவத்தை டிச.15 முதல் சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம். தலைமைக் கழகத்தில் வருகின்ற 15ம் தேதி திங்கட்கிழமை முதல் 23ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும்.

முதல் நாளான 15ம் தேதி அன்று மட்டும் நண்பகல் 12 மணி முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும். விருப்ப மனு படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம்” என தெரிவித்துள்ளார்.

பாமகவும் விநியோகம்: பாமக சார்பிலும் விருப்ப மனுக்கள் 14-ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன. இது தொடர்பாக கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், ‘‘ வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் டிச.14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் டிச.20-ம் தேதி வரை (சனிக்கிழமை) வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்.

இந்த நாட்களில் சென்னை பனையூர், கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள கட்சி தலைவர் அலுவலகத்தில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும்.

போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிச.20-ம் தேதி மாலை 6 மணிக்குள், பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக 15ம் தேதி, பாமக 14-ல் - விருப்ப மனு விறுவிறு…
விஜய்யை முதல்வராக ஏற்போருடன் கூட்டணி: தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in