திமுகவின் ‘பி-டீம்’ தவெக: அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சனம்

திமுகவின் ‘பி-டீம்’ தவெக: அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சனம்
Updated on: 
1 min read

மதுராந்தகம்: தவெக திமுக​வின் 'பி டீம்' அதி​முக​வின் வாக்கு வங்​கியைப் பிரிப்​ப​தற்​காக திமுக​வின் ஏற்​பாட்​டில் தொடங்​கப்​பட்டஇயக்​கம் என அதி​முக எம்​.பி. இன்​பதுரை விமர்​சித்​துள்​ளார்.

மது​ராந்​தகத்​தில் தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: மது​ராந்​தகம், தாராபுரம் தொகு​தி​களில் அதி​முக வெற்றிபெற்​றிருந்த நிலை​யில், எம்எல்​ஏக்​களை வேறு கட்​சிக்கு அழைத்​துச் சென்​ற​தால் இடைத்​தேர்​தல் திணிக்​கப்​பட்​டுள்​ளது.

மக்​கள் இரட்டை இலைச் சின்​னத்​துக்​கும் பழனி​சாமி​யின் ஆட்​சிச் சாதனை​க்​கும்​தான் வாக்​களித்​தனர். தவெக திமுக​வின் ‘பி-டீம்’. அதி​முக​வின் வாக்கு வங்​கியைப் பிரிப்​ப​தற்​காக திமுக​ ஏற்​பாட்டில் தொடங்​கப்​பட்ட இயக்​கம். திமுகவை கொரோனா என்​றால், தவெகவை உருமாறிய கொரோனா எனக் கூறலாம்.

தமிழகத்​தில் சட்​டம்​- ஒழுங்கு சீர்​குலைந்​துள்​ளது. பெண்​களுக்​குப் பாது​காப்​பற்ற சூழல் நில​வு​கிறது. விலை​வாசி, மின்​கட்டண உயர்​வால் மக்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். ஊழல் தடுப்​புச் சோதனை​கள், அரசு நிதி செல​வினங்​கள் தொடர்​பாக வெளிப்​படைத்​தன்மை தேவை. விஜய் எம்​ஜிஆர் பிம்​பத்தை பயன்​படுத்​துகிறார். இதை மக்​கள் ஏற்​க​மாட்​டார்​கள். அதி​முக ​வழி​காட்டிகள் எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் கொள்​கைகளு​டன் தொடர்​கிறோம். இவ்​வாறு கூறினார்​.

திமுகவின் ‘பி-டீம்’ தவெக: அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சனம்
எஸ்ஐஆர் குறித்து ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள்: தேர்தல் ஆணையம் விவரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in