நத்தம் விஸ்வநாதன், டி.ஜெயக்குமார் உள்பட 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அறிவித்தது அதிமுக!

ADMK Election Manifesto panel

அதிமுக தலைமை அலுவலகம்

Updated on
1 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், எம்.பி. சிவி சண்முகம் உள்ளிட்டோர் அடங்கிய 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்துள்ளது அதிமுக.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மக்களுக்கு பல்வேறு வகைகளில் நலம் பயக்கும் வகையிலான தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்காக, பின்வருமாறு குழு அமைக்கப்படுகிறது.

* நத்தம் விஸ்வநாதன்,  அதிமுக துணைப் பொதுச் செயலாளர் திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

* ஊ.பொன்னையன் , அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்.

* முனைவர் பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், எம்எல்ஏ கழக தேர்தல் பிரிவுச் செயலாளர், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

* டி.ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளர், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

* சி.வி.சண்முகம், எம்.பி,  கழக அமைப்புச் செயலாளர் விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

* செ.செம்மலை, கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

* பா.வளர்மதி, கழக மகளிர் அணிச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்.

* ஓ.எஸ்.மணியன் எம்எல்ஏ, கழக அமைப்புச் செயலாளர், நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

* ஆர்.பி. உதயகுமார், எம்எல்ஏ கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர்.

* முனைவர் எஸ்.எஸ். வைகைச்செல்வன், கழக இலக்கிய அணிச் செயலாளர், கழக செய்தித் தொடர்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

மேற்கண்ட குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பட்ட மக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் பெற்று வரும் வகையிலான சுற்றுப் பயணத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in