தேர்தல் போட்டியில் இருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான்

தேர்தல் போட்டியில் இருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான்
Updated on
1 min read

திருச்சி: திருச்சி லால்குடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியது: தேர்தலின் போக்கு தற்போது மாறியுள்ளது. தேர்தலில் செலவழிக்கும் அளவுக்கு என்னிடம் பொருளாதார வசதி இல்லை. மேலும், எனக்கு உடல் நிலை சரியில்லாததால், சிகிச்சையில் இருக்கிறேன். மத்திய அரசால் தமிழகத்துக்கு இக்கட்டான நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தை காப்பாற்ற திமுக தலைவர் ஸ்டாலினால்தான் முடியும் என திடமாக நம்புகிறேன். அதனால் தமிழகம் முழுவதும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து நான் லால்குடி தொகுதியில் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டேன். நான் யாரிடமும் காசு வாங்கிக் கொண்டுவிலகவில்லை என்றார்.

தேர்தல் போட்டியில் இருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான்
ஓபிஎஸ் ஸ்டேட்டஸ்... போடி தொகுதி ‘பதம்’ பார்க்குமா, பதவி தருமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in