“நெல் கொள்முதலுக்கு லஞ்சம் பெறுவோர் மீது நடவடிக்கை”- அமைச்சர் வினோத்

அமைச்சர் வினோத்| கோப்புப் படம்

அமைச்சர் வினோத்| கோப்புப் படம்

Updated on: 
1 min read

திருச்சி: “நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலுக்கு லஞ்சம் பெறுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளோம்” என தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பருவமழை தொடங்கியுள்ளதால் நெல் கொள்முதல் நிலையங்களில் எங்கு தேவைப்படுகிறதோ அங்கு புதிய கூரைகள் அமைக்க அறிவுறுத்தியுள்ளோம். தேவைப்படும் இடங்களில் புதிய கூரைகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை தடுக்க எந்தெந்த பகுதிகள் அபாயகரமாக உள்ளதோ அந்தப் பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வார, பயிர்களைக் காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்ய ஒரு சிலர் பணம் பெறத்தான் செய்கின்றனர். தவறு எங்கு நடைபெறுகிறதோ அங்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். இனிவரும் காலங்களில் இது போன்று நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள உள்ளது.

தமிழ்நாட்டில் உரத் தட்டுப்பாடு என்பது கிடையாது. விவசாயிகள் தேவைக்கேற்ப விநியோகம் சரியாக உள்ளது. அவதூறு கருத்துக்கள் முதல்வர் பற்றி வைத்தால் மட்டும் அல்ல, யார் குறித்து அவதூறாகப் பேசினாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் தண்டனையை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.” என்று அமைச்சர்கள் வினோத் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் வினோத்| கோப்புப் படம்</p></div>
“2-வது முறையாக 25,000 மெட்ரிக் டன் சன்ன ரக அரிசி விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது”- அமைச்சர் வெங்கடரமணன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in