வருகையில்லா ஆவணப் பதிவு ஆக.17-ல் தொடக்கம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தகவல்

லோகேஷ் தமிழ்செல்வன்

லோகேஷ் தமிழ்செல்வன்

Updated on
1 min read

கோவை: வரு​கை​யில்லா ஆவணப் பதிவு முறையை வரும் 17-ம் தேதி முதல்​வர் தொடங்கி வைக்​கிறார் என, கோவை​யில் வணி​கவரி மற்​றும் பதிவுத்​துறை அமைச்​சர் த.லோகேஷ் தமிழ்​செல்​வன் தெரி​வித்​தார்.

இதுகுறித்து கோவையில் நடந்த விளக்க கூட்டத்தில் அமைச்​சர் த.லோகேஷ் தமிழ்​செல்​வன் பேசி​ய​தாவது: வரு​கை​யில்லா ஆவணப் பதிவு நடை​முறை திட்​டத்தை விரை​வாகக் கொண்டு வர முதல்​வர் ஆர்​வத்​துடன் உள்​ளார். அதன்​படி, தமிழ்​நாடு முதல்​வ​ரால் வரும் 17-ம் தேதி வரு​கை​யில்லா ஆவணப்​ப​திவு நடை​முறை தொடங்கி வைக்​கப்பட உள்​ளது.

தற்​போது ‘ஃபர்​ஸ்ட் பிளாட், ஃபர்​ஸ்ட் சேல்’ ஆகிய ஆவணப் பதிவு​கள் இணைய வழி​யில் கொண்டு வரப்​படு​கின்​றன. இன்​னும் படிப்​படி​யாக அனைத்து வித​மான பத்​திரப் பதிவு​களும் இணை​ய​வழி​யில் கொண்டு வரப்​படும். பத்​திரப்​ப​திவுத் துறை​யில் இடைத்​தரகர்​களின் தலை​யீடு உள்​ளிட்ட பல்​

வேறு பிரச்​சினை​களை களைந்​து, ஒரு வெளிப்​படை​யான முறையை உரு​வாக்க இப்​பு​திய நடை​முறை​களை செயல்​படுத்தி வரு​கிறோம். இவ்​வாறு தெரி​வித்​தார்.

கூட்​டத்​தில் பத்​திரப்​ப​திவுத் துறை தலை​வர் ஜி.கே.அருண்​சுந்​தர் தயாளன், ஆட்​சி​யர் பவன்​கு​மார் கிரியப்​பனவர் உள்​ளிட்​டோர் கலந்து கொண்டனர்.

<div class="paragraphs"><p>லோகேஷ் தமிழ்செல்வன்</p></div>
“இளைஞர்களின் நலனுக்காக தேர்வு முறைகளில் சீர்திருத்தங்கள்...” - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in