

சென்னை: புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், பால்வளத் துறையில் நிலைத்தன்மை மற்றும் விவசாயிகள் நலனை ஊக்குவிக்கும் மாநில அரசின் சிறந்த தலைவருக்கான விருது ஆவின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இந்திய வர்த்தக மேம்பாட்டு சபை சார்பில், பால்பண்ணை செயலாக்கம் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடுபுதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில், பால்வளத் துறையில் நிலைத்தன்மை மற்றும் விவசாயிகள் நலனை ஊக்குவிக்கும் மாநில அரசின் சிறந்த தலைவருக்கான விருது ஆவின் நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி, டெய்ரி டைடன் விருதை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெற்றுக் கொண்டார்.