ஆன்லைனில் ரயில் முன்பதிவு டிக்கெட் எடுக்க ஜன.12 முதல் ஆதார் கட்டாயம்

ஆன்லைனில் ரயில் முன்பதிவு டிக்கெட் எடுக்க ஜன.12 முதல் ஆதார் கட்டாயம்
Updated on
1 min read

சென்னை: ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஜன. 12 முதல் ஆதார் இணைப்பு கட்டாயம் என ரயில்வே அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் 85 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். பண்டிகை காலங்கள், வாரவிடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் ரயில்களில் டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். சிறப்பு ரயில்கள் அறிவித்தாலும், தொடங்கிய சில நிமிடத்திலேயே முன்பதிவு முடிந்துவிடுகிறது. இதனால், டிக்கெட்முன்பதிவில் முறைகேடுகள் நடப்பதாக பயணிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இந்நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளை தடுக்க ஆதார் எண் இணைப்பை ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் காலை 8 முதல் 10 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என தற்போது அமலில் இருக்கிறது. தற்போது மற்ற நேரங்களிலும் ஆதார் இணைப்பு படிப்படியாக கட்டாயமாக்கப்பட உள்ளது. அதன்படி, டிச.29-ம் தேதி யில் இருந்து காலை 8 முதல் மதியம் 12 மணி வரையும், ஜன.5-ல் இருந்து காலை 8 முதல் மாலை 4 மணிவரையும் டிக்கெட் எடுக்கஆதார் இணைப்பு கட்டாயமாகிறது.

மேலும், ஜன.12-ம் தேதிமுதல் ஆன்லைனில் ரயில் டிக்கெட் எடுக்க வேண்டுமெனில் ஆதார் எண் இணைப்பு இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என ரயில்வே தெரிவித் துள்ளது.

ஆன்லைனில் ரயில் முன்பதிவு டிக்கெட் எடுக்க ஜன.12 முதல் ஆதார் கட்டாயம்
“தனியா, அணியா?” - தேர்தல் கூட்டணி குறித்து விஜய் சூசகம் | ‘ஜனநாயகன்’ விழா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in