சென்னையில் விபத்துகள், குற்றங்கள் இல்லாத புத்தாண்டு தினம்: காவலர்களுக்கு ஆணையர் அருண் பாராட்டு!

Chennai cops in New Year patrol

சென்னை புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்புப் பணியில் போலீஸார்

Updated on
2 min read

சென்னை: புத்தாண்டு தினத்தை ஒட்டி சென்னையில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகளால் விபத்து, உயிரிழப்பு, குற்றங்கள் இல்லாத புத்தாண்டு தினமாக அமைந்தது. இதற்காக அயாரது பாடுபட்ட காவலர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் பாராட்டு தெரிவித்தார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல்துறையினரின் 2026 புத்தாண்டு தினத்தை ஒட்டி தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளினால் உயிரிழப்பு மற்றும் குற்றங்கள் நடவாத புத்தாண்டு தினமாக அமைந்துள்ளது.

2026ம் ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமலும், விபத்தில்லாமலும், பொதுமக்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) என மொத்தம் 19,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கைகள், போக்குவரத்து சீர் செய்தல், கூட்ட நெரிசலை தவிர்க்க ஒரு வழி பாதை அமைத்தும், விபத்தில்லாமல் கொண்டாடுவதற்காக மேம்பாலங்களில் இரவு நேரங்களில் மூடப்பட்டும், கடற்கரை பகுதிகளில் நீரில் பொதுமக்கள் இறங்காமல் இருக்க தடுப்புகள் அமைத்தும், காவல் உதவி மையங்கள், கூடாரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.

நேற்று (31.12.2025) சென்னை பெருநகர காவல், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் அயராது மேற்கொண்ட சிறப்பான பணியால் 2026-ம் புத்தாண்டு கொண்டாட்டம், சென்னை பெருநகரில், அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும், உயிர் இழப்புகள் இல்லாமலும், விபத்துகள் தவிர்க்கப்பட்டும், குற்றங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நடவாமல் கொண்டாடப்பட்டதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், நேற்று (31.12.2025) சென்னை பெருநகரில் சிறப்பாக பணிகள் மேற்கொண்ட, காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரை பாராட்டி, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai cops in New Year patrol
புத்தாண்டு 2026 கோலாகல கொண்டாட்டம்: வாழ்த்துகளை தெரிவித்து பொதுமக்கள் உற்சாகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in