'இது எங்களுக்கான நாள்' - கும்பகோணத்தில் ஓட்டுநர் தினம் உற்சாகக் கொண்டாட்டம்

'இது எங்களுக்கான நாள்' - கும்பகோணத்தில் ஓட்டுநர் தினம் உற்சாகக் கொண்டாட்டம்
Updated on
1 min read

தஞ்சாவூர்: ஜூன் 1-ம் தேதி ஒட்டுநர் தினத்தை ஒட்டி, கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கொடியேற்றி, அப்பகுதியிலுள்ள ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளன மாநிலப் பொருளாளர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் சா. ஜீவபாரதி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில செயற் குழு உறுப்பினர் ஆர். ராஜகோபாலன் ஆகியோர் கொடியேற்றி இந்நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.

மாநிலக் குழு உறுப்பினர் சாமிநாதன், கும்பகோணம் ஆட்டோ ஓட்டுநர் சங்க நகரச் செயலாளர்கள் கார்த்திகேயன், மகாராஜா, மணிவண்ணன், கவுரவத் தலைவர் செந்தில்குமார், தஞ்சாவூர் மாவட்ட ஆட்டோ சங்க பொறுப்பாளர் எல்.ஜி மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பங்கெடுத்த ஓட்டுநர்கள் இது எங்களுக்கான நாள் என்று இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in