Published : 28 Oct 2017 09:13 AM
Last Updated : 28 Oct 2017 09:13 AM

லஞ்சம் வாங்கியதாக நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் கைது

விழுப்புரம் - வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராயர். இவர் விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எல்லீஸ் சத்திரம் சாலைய ஒட்டி உணவகம் நடத்தும் வகையில் கட்டிடம் கட்டினார். தேசிய நெடுஞ்சாலையையும், உணவகத்தையும் இணைக்கும் வகையில் 5 அடி உயரத்துக்கு சுமார் 6,000 சதுர அடி பரப்பளவில் இதற்கான வழி அமைத்தார்.

இதனை அறிந்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) திட்ட இயக்குநர் பீம சிம்ஹா அனுமதியின்றி வழி அமைத்ததாக கூறி அந்த வழியை இயந்திரங்கள் மூலம் அகற்றினார்.

இதற்கு அனுமதி அளிக்கவும், ஆய்வறிக்கை பரிந்துரை செய்யவும் ராயரிடம், திட்ட இயக்குநர் பீம் சிம்ஹா ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். சிபிஐ அதிகாரிகள் ஆலோசனைப்படி ரூ.2 லட்சத்தை தரும்போது சிம்ஹாவும், அவரது உதவியாளர் சரவணனையும் ஊழல் ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x