

தமிழகத்தில் வரும் 2024-ம் ஆண்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் 9 நாள் அரசு முறைபயணமாக கடந்த 23-ம் தேதி சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.