கல்பாக்கத்தில் இருந்து நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்க கோரிக்கை

கல்பாக்கத்தில் இருந்து நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்க கோரிக்கை
Updated on
1 min read

கல்பாக்கம்: கல்பாக்கம் பகுதியில் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இதில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என பலர் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், கல்பாக்கம் பகுதியிலிருந்து செங்கல்பட்டு வழியாக தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக வேலூர் பகுதிக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்பபட்டு வந்தன.

இதேபோல், பெங்களூரு மற்றும் தென்மாவட்டங்களுக்கும் நேரடி பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன. இந்நிலையில், கரோனா தொற்று பரவின்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால், போக்குவரத்து சேவைகள் முடங்கின. தொற்று பரவல் குறைந்த பின்பும் பெங்களூர், வேலூர் மற்றும் தென்மாவட்டங்களுக்கு வழக்கம்போல் மீண்டும் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதில், கல்பாக்கம்-வேலூர் இடையே இயக்கப்படும் தடம் எண் 157 என்ற நேரடி பேருந்து மற்றும் செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் தடம் எண் 108 என்ற பேருந்து சேவைகளின் எண்ணிக்க கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் பெங்களூரு, சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் தாம்பரம், காஞ்சிபுரம் பகுதிகளுக்கு சென்று பேருந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதனால், கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொலைதூர பேருந்துகளில் நின்றுக்கொண்டு பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு நிறுத்தப்பட்ட நேரடி பேருந்து சேவைகளை மீண்டும் இயக்க வேண்டும் என கல்பாக்கம் சுற்றுப்புற கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in