Published : 01 Jun 2023 06:11 AM
Last Updated : 01 Jun 2023 06:11 AM

தமிழகத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான்: அண்ணாமலை நம்பிக்கை

மதுரை: தமிழகத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான் அமையப்போகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரை அண்ணாநகரில் நேற்று இரவு நடந்த நடந்தது.

இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய தாவது: பாஜகவின் முதல் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடக்கிறது. 2024-ம் ஆண்டில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும். ஏழை என்றால் வாக்கு சேகரிக்க மட்டுமே என்று அரசியல் கட்சியினர் கருதுகின்றனர்.

கடந்த 9 ஆண்டுகளில் ஏழை சகோதர சகோதரிகளின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியா என்றால் ஊழல் நாடு என்ற பெயர் இருந்தது. அந்த பெயரை ஒழித்துக் கட்டி, மக்களுக்கான ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது. கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் பிரதமர் மீது கடுகளவுகூட ஊழல் குற்றச்சாட்டுகளை கூற முடியாது.

தமிழுக்கு இந்திய மண்ணில் தனி இடம் இருக்கிறது. சங்கம் வைத்து தமிழை வளர்த்த மண்ணாக மதுரை பெருமை பெற்றது. தமிழின் வளர்ச்சிக்காக தற்போது பிரதமர் மோடி துணை நிற்கிறார். வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கம் நடத்தினார். திருக்குறளின் பெருமைகளை அனைத்து இடங்களிலும் கொண்டு செல்கிறார்.

புதிய மக்களவைக் கட்டிடத்தில் திருவாசகம் பாடப்பட்டு செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. மக்களவைக்கு எப்போது செங்கோல் போனதோ, அப்போதே அறம் சார்ந்த ஆட்சிதான் பாஜக நடத்திக் கொண்டிருக்கிறது என்பதும், அடுத்து பாஜக ஆட்சிதான் அமையப்போகிறது என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அறம் சார்ந்த ஆட்சி அமையப்போகிறது.

முதல்வர் ஸ்டாலின் ஜப்பானில் இருந்து கொண்டு மத்திய அரசை குறைகூறிக் கொண்டு இருக்கிறார். கடந்த 2 ஆண்டு கால திமுக ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. யார் ஊழல் செய்து உள்ளார்கள் என்பதை நாங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.

அதற்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மதுரையை சேர்ந்த அமைச்சரின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுகவை பொருத்தவரையில் முதல்வர் குடும்பத்தை யார் எதிர்த்தாலும், அவர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x