கிராண்ட் பிரிக்ஸ் சர்வதேச போட்டியில் தங்கம் வென்று அசத்திய மதுரை இளைஞர் - டிடிவி தினகரன் வாழ்த்து

கிரீஸ் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் தங்கம் வென்ற மதுரை இளைஞர் செல்வ பிரபு திருமாறன்
கிரீஸ் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் தங்கம் வென்ற மதுரை இளைஞர் செல்வ பிரபு திருமாறன்
Updated on
1 min read

சென்னை: கிரீஸ் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் நாட்டிற்காக தங்கம் வென்ற மதுரை இளைஞர் செல்வ பிரபுவுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்வ பிரபு கிரீஸ் நாட்டின் வெனிசெலியா நகரில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் சர்வதேச போட்டியில்,‌ மும்முறை நீளம் தாண்டுதலில் ஆடவர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழகத்தின் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த செல்வ பிரபு இந்தியாவிற்காக சாதனை படைத்திருப்பதை பெருமிதத்துடன் பாராட்டுகின்றேன். இந்த சாதனையின் வாயிலாக தாய்லாந்தில் ஜூலை 12ம் தேதி நடைபெறும் 2023 Asian Athletics Championships போட்டிக்கு தகுதி பெற்றுள்ள செல்வ பிரபு, எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை பெறவும் வாழ்த்துகின்றேன்" என தினகரன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in