சேலம் அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் - முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்
முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சேலம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் மாவட்டம், முனியப்பன் கோவில் காட்டுவளவு, விருத்தாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரணிதரன் (வயது 15) மற்றும் கரட்டுப்பட்டி நங்கவள்ளி கிராமத்தைச் சேர்ந்த கிரித்திஷ் (வயது 8) ஆகிய இரண்டு சிறுவர்களும் நேற்று (30-5-2023) விருத்தாசம்பட்டி கிராமம், முனியப்பன் கோவில் காட்டூர் ஏரியில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவிக்கப்பட்டுள்ள்து.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in