ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு தமிழிசை, ஸ்டாலின் வாழ்த்து

ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு தமிழிசை, ஸ்டாலின் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: 2023 ஐபிஎல் தொடரில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துகள். மகேந்திர சிங் தோனி தலைமையில் மிகச் சிறப்பாக விளையாடிய, குறிப்பாக கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர், ஃபோர் அடித்து அணி வெற்றி பெற காரணமாக இருந்த ரவீந்திர ஜடேஜாவுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தோனி என்ற மனிதனின்கீழ் 5-வது ஐபிஎல் கோப்பையை வென்ற மஞ்சள் படைக்கு வாழ்த்துகள். இது மிகச் சிறந்த கிரிக்கெட் போட்டி. நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: 2023 ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கும், அணிக்கு தலைமையேற்ற மகேந்திர சிங் தோனிக்கும் மனமார்ந்த பாராட்டுகள். வெற்றிகள் தொடர எனது நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா, வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in