Published : 31 May 2023 05:53 AM
Last Updated : 31 May 2023 05:53 AM

கடல்சார் பல்கலை.யில் 5 புதிய பட்டப்படிப்புகள்

சென்னை: இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கே.டி.ஜோஷி, நிதி அதிகாரி எம்.சரவணன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கடல்சார் தொழில்துறையின் தேவையை கருத்தில்கொண்டு இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் எம்டெக் (மரைன் டெக்னாலஜி, எம்பிஏ (சர்வதேச போக்குவரத்து மற்றும் தளவாட மேலாண்மை) ஆகிய முதுநிலை படிப்புகளையும், பிஎஸ்சி (கடல்சார் அறிவியல்), பிபிஏ (தளவாடங்கள் சில்லறை வணிகம் மற்றும் மின்-வணிகம்), பிபிஏ (கடல்சார் தொழில்பயிற்சி) ஆகிய 3 இளநிலை படிப்புகளையும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் கடல்சார்துறையில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் எண்ணிக்கை 2014-ல் 13 ஆக இருந்தது. தற்போது அது 123 ஆக உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் 50 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் அண்மையில் பிடபிள்யு குளோபல் யுனைடெட் எல்பிஜி என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு 2022- 2026 காலகட்டத்துக்கு ரூ.200 கோடி வழங்கியுள்ளது. இதில் புதுமை ஆய்வகம், சிமுலேட்டர் மற்றும் நவீன ஆய்வகங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x