

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே மாமியாரை கம்பால் தாக்கி கொலை செய்த மருமகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் சீதபற் பநல்லூர் அருகே துலுக்கர்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகப்பட் டியை சேர்ந்தவர் சண்முகவேல் (63). துலுக்கர்குளம் ஊராட்சி துணைத் தலைவராக உள்ளார். இவரது மனைவி சீதாராமலெட்சுமி (58). இவர்களது மகன் ராமசாமிக்கு திருமணமாகி, மகாலெட்சுமி (27) என்ற மனைவியும், 2 குழந்தை களும் உள்ளனர்.
மாமியார் சீதாராமலெட்சுமிக் கும், மருமகள் மகாலெட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் அதிகாலையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாமியார் சீதாராம லெட்சுமியை, மகாலெட்சுமி கம்பால் சரமாரியாக தாக்கிவிட்டு, அவரது கழுத்தில் கிடந்த செயினை பறித் துக்கொண்டு சென்றுவிட்டார். பலத்த காயமடைந்த சீதாராமலெட்சுமி திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். போலீஸார், மகாலெட்சுமியை கைது செய்தனர்.
சீர்கேடு ஏன்?: இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மனநலத் துறை உதவி பேராசிரியர் ஆ.காட்சன் கூறியதாவது: குடும்பங்களில் ஒருவருக்கொருவர் உரையாடி மகிழும் தனிமனித உறவுகள் தொலைக்காட்சி தொடர்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குடும்ப பிரச்சினைகளை பொது வானதாக தொலைக்காட்சி தொடர்களில் திரும்பத் திரும்ப காட்டுவதால் உறவுகளிடையே நம்பிக்கையற்ற தன்மை, சந்தேகம், பாதுகாப்பற்ற உணர்வுகள் தலைதூக்குகின்றன. இவை மனநோயாக வெளிப்படுகிறது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமலும், பின்விளைவுகளை யோசிக்கும் தன்மை குறைந்து போவதாலும் சின்ன பிரச்சினைகள் பெரிய பிரச்சினைகளாக உருவெடுக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் இந்த கொலை என்றார்.
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மனநலத்துறை இணை பேராசிரியர் ஜி.ராமானுஜம் கூறியது: ஒரு பெண் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்குச் செல்லுதல், குழந்தைப்பேறு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அவர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்குகிறது. புகுந்த வீட்டில் அவர்களுக்கு ஆதரவாக யாரும் இல்லாதபோது பல்வேறு பிரச்சினைகள் உருவெடுக்கின்றன. இவை நெருப்பு என்றால் அதில் எண்ணெயை ஊற்றும் வேலையை தொலைக்காட்சி தொடர்கள் செய்கின்றன. எனினும், தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்னரும் மாமியார், மருமகள் பிரச்சினைகள் இருந்துள்ளன என்றார்.