Published : 31 May 2023 06:20 AM
Last Updated : 31 May 2023 06:20 AM
பொன்னேரி: திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி என, திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை பழவேற்காடு, பொன்னேரி, மீஞ்சூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கருமேகம் சூழ்ந்து பலத்த காற்று வீசியது. இதில், பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.
அதே நேரத்தில், மாநகர பேருந்து ஒன்று பழவேற்காட்டில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த பேருந்து, பழவேற்காடு அருகே பிரளயம்பாக்கம் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது, பலத்த காற்றில் சிக்கி பேருந்தின் மேற்கூரை முற்றிலுமாக கழன்று விழுந்தது.
இதையடுத்து, ஒட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். இதனால், பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கியதால் காயமின்றி தப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT